நிலம் கையகப்படுத்த அளவீடு பணி துரிதம்
அன்னுார்: அன்னுார் கடைவீதியில், சாலை அகலப்படுத்த நிலம் கையகப்படுத்தும் பணி துவங்கி உள்ளது.
அவிநாசியிலிருந்து, அன்னுார் வழியாக மேட்டுப்பாளையம் வரை, நான்கு வழி சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. அன்னுார் கடைவீதியில், சத்தி சாலையும், அவிநாசி சாலையும் பிரியும் இடத்தில், குறுகலாக இருப்பதால், அடிக்கடி விபத்து நடக்கிறது. போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்கின்றன. இதற்கு தீர்வாக, அந்த சந்திப்பில், ரவுண்டானா அமைக்க, மாநில நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது.
இதற்காக, சத்தி சாலை மற்றும் அவிநாசி சாலையில், நிலம் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டு, நில உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் தரப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, நில அளவை செய்யும் பணி நடந்தது. சத்தி சாலையில், மாநில நெடுஞ்சாலை துறையின் நில எடுப்பு (அலகு மூன்று) வருவாய் ஆய்வாளர் சரண்ராஜ் தலைமையில், ஆறு அலுவலர்கள், நிலம் அளக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சத்தி சாலையில், கடைவீதியில் துவங்கி, சாலையின் தெற்கு பகுதியில் அளக்கும் பணி நடந்தது. அன்னுாரில் கடும் போக்குவரத்து நெரிசல் உள்ளதால், சாலையை அகலப்படுத்தினால், போக்குவரத்து நெரிசல் குறையும் வாய்ப்புள்ளது என்பதால், ரவுண்டானா அமைப்பது மக்களுக்கு மகிழ்ச்சி தருகிறது.
மேலும்
-
பிரெஞ்ச் ஓபன் பாட்மிண்டன் பைனலில் சிந்து ஏமாற்றம்; கொரிய வீராங்கனையின் தொடரும் ஆதிக்கம்
-
சொந்த ஆதாயத்திற்கு சட்டத்தை பயன்படுத்தக்கூடாது வழக்கறிஞர்களுக்கு சுப்ரீம்கோர்ட் நீதிபதி அறிவுரை
-
ஆட்சீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் விமரிசை
-
புதுயுகம் பிறந்திருக்கிறது சபாநாயகர் பிரபாகர் பெருமிதம்
-
ரூ.22 கோடியில் ஒப்பந்தம் விட்டும் தெருவிளக்குகள் ஒளிராததால் அச்சம்: இருளில் தவிக்கும் ஆவடி மாநகராட்சி
-
பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலியில் மீண்டும் போராட்டம்: அலறும் ஐரோப்பா