ஓடிபி, பாஸ்வேர்டுகளை யாரிடமும் பகிர கூடாது; வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ வங்கி அறிவுறுத்தல்
-நமது நிருபர்-
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப்பில் கசிந்ததை அடுத்து, சைபர் பாதுகாப்பு பிரிவு விசாரணை நடத்துகிறது. ஆய்வில் 3.75 லட்சம் பதிவுகளில் 3,897 வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் கசிந்தது உறுதி செய்யப்பட்டது.
முன்னணி தனியார் சைபர் பாதுகாப்பு நிறுவனத்தின் உதவியையும் வங்கி நாடியுள்ளது. இன்று (அக்டோபர் 23) ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வெளியிட்டுள்ள அறிக்கை:
* வாடிக்கையாளர்களின் கணக்கு இருப்புகளும், பணமும் எங்களிடம் பாதுகாப்பாக உள்ளன. வாடிக்கையாளர்கள் பாதுகாப்பான டிஜிட்டல் வங்கி நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
* தங்களின் ஓடிபி, பாஸ்வேர்டுகளை யாருடனும் பகிர கூடாது; சந்தேகத்திற்கிடமான அழைப்புகள், செய்திகள் மற்றும் மின்னஞ்சல்கள் வந்தால் விழிப்புடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.
மேலும்
-
ராகுல் - பிரியங்கா இடையே மோதல்?: கண்காட்சி விவகாரத்தில் வம்பிழுக்கும் பா.ஜ.,
-
கட்டாமல் விடப்பட்ட 31,000 வீடுகள்: ரூ.100 கோடியை வசூலிக்க அரசு திணறல்
-
இன்ஜினியரிங் படிக்காதவர் உருவாக்கினார் பறக்கும் கார்
-
தீபாவளி நெரிசலுக்கேற்ப போக்குவரத்து மாற்றம்
-
புதுச்சேரியில் 500 கார்களை ‘பார்க்’ செய்ய திட்டம்
-
உழந்தை ஏரியில் நீர் வரத்து