புதுச்சேரியில் 500 கார்களை ‘பார்க்’ செய்ய திட்டம்
புதுச்சேரி: புதுச்சேரியில், 500 கார்கள் ‘பார்க்கிங்’ செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் கார்களை ‘பார்க்கிங்’ செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அலுவலகத்தில் நடந்தது. அப்போது அவர் கூறியதாவது:
சுற்றுலா பயணிகளின் கார்களை ‘பார்க்கிங்’ செய்ய, பழைய துறைமுகத்தில் நடவடிக்கைகள் நடந்து வருகிறது.
மத்திய அரசு கடற்கரை மேம்பாடு, பாரதி பூங்கா சீரமைப்பு, பார்க்கிங் வசதி செய்ய, ரூ.131 கோடி ஒதுக்கியுள்ளது. இது குறித்து முதல்வரிடம் விளக்கி உள்ளேன்.
முதல்வர் மாற்று ஏற்பாடாக வேறு ஒரு சாலையை தேர்வு செய்ய கூறியுள்ளார். கடற்கரை அருகில் ஒரு சாலை, தீயணைப்பு நிலையம் அருகில் ஒரு சாலை, மின் துறை அருகில் ஒரு சாலையை பயன்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் கூறி, 500 கார்கள் பார்க்கிங் செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
இரண்டு மாத குழந்தை வயிற்றில் வளரும் கரு
-
மழைநீர் வெளியேற்ற எம்.எல்.ஏ., நடவடிக்கை
-
இறப்பு விபர மருத்துவ சான்றிதழ்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்க கோரிக்கை
-
நத்தம் ரோட்டில் அதிகரிக்கும் டூவீலர் விபத்து உயிரிழப்புக்கள்: எஸ்.பி., நடவடிக்கை அவசியம்
-
திருவொற்றியூர் வாரிய குடியிருப்பு கட்டுமான பணிகள் இழுபறி மூன்று ஆண்டுகளாக சிரமப்பட்டு வரும் பயனாளிகள்
-
இடிந்து விழும் அபாயத்தில் வன அலுவலகம்: ஊழியர்கள் அச்சம்: புதுப்பிக்க நிதியில்லை