கார் மரத்தில் மோதி பலி 1 : காயம் 3

சிவகங்கை: சிவகங்கை அருகே பனைமரத்தில் கார் மோதியதில் ஒருவர் பலியானார். மூன்று பேர் படுகாயமுற்றனர்.

சிவகங்கை பொதிகை நகர் தனியார் நிறுவன ஊழியர் சிவசங்கர் 43. இவரது நண்பர்கள் காளவாசல் கோபி 28, நேரு பஜார் மணிபாரதி 33, பிரகாஷ் 33. நான்கு பேரும் நேற்று மாலை சிவகாசியில் பட்டாசு வாங்கி கொண்டு காரில் சிவகங்கை திரும்பினர்.

இன்று அதிகாலை 5:30 மணிக்கு சிவகங்கை பனையூர் அருகே வந்த போது கார் நிலைதடுமாறி பனைமரத்தில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் சிவசங்கர் பலியானார். காயமுற்ற கோபி மதுரையிலும், கார் ஓட்டிய பிரகாஷ், மணி பாரதி சிவகங்கையிலும் அனுமதிக்கப்பட்டனர். இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement