லாரி மோதி இளம் பெண் பலி

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே லாரி மோதி பெண் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த கிளாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மனைவி கொளஞ்சி, 31; கூலித் தொழிலாளி. இவர், இன்று (அக்.,25) மதியம் 2:00 மணியளவில் அண்டராயநல்லுாரில் குமார் என்பவரது நிலத்திற்கு அருகாமையில் லாரியில் சவுக்கை அறுவடை செய்து லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தார்.

அப்போது லாரி டிரைவர் எதிர்பாராதவிதமாக லாரியை வேகமாக இயக்கிய போது லாரிக்கு அருகாமையில் நின்று கொண்டிருந்த கொளஞ்சி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement