சொந்த ஆதாயத்திற்கு சட்டத்தை பயன்படுத்தக்கூடாது: வழக்கறிஞர்களுக்கு சுப்ரீம்கோர்ட் நீதிபதி அறிவுரை
சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு விழா, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ், உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து பேசியதாவது:
சமூக மாற்றத்தில் வழக்கறிஞர்களின் பங்கு முக்கியமானது. இன்றைய சூழலில், இளம் வழக்கறிஞர்களுக்கு என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பதை, நாம் கவனிக்க வேண்டியது அவசியமாகும். ஏனெனில், தற்போது வழக்கறிஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேநேரம், புதிய வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
கடந்த, 25 ஆண்டுகளுக்கு முன், கிராமங்களை சார்ந்த சமூகமாக இருந்த நமது வாழ்க்கை முறை, தற்போது நகர மயமாகி உள்ளது. இதனால், வழக்குகளின் தன்மையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. முன்னர் கிராமங்களில், 'சிவில்' வழக்குகள் அதிகமாக இருந்தன. தற்போது, சமூகத்தின் பொருளாதார செயல்பாடுகள் அதிகரித்துள்ளதால், வணிகம், வர்த்தகப் பரிவர்த்தனைகள், பணம் கொடுத்தல் வாங்கல் போன்ற வழக்குகள் அதிகரித்துள்ளன. 'சைபர்' குற்றங்கள் மற்றும் திருமணம் சார்ந்த வழக்குகளும் அதிகரித்துள்ளன.
எனவே, சமூகத்தின் வளர்ச்சி, பொருளாதார சூழலுக்கு ஏற்ப, எதிர்காலத்தில் எந்த வகையான வழக்குகள் உருவாகும் என்பதை, இளம் வழக்கறிஞர்கள் அறிந்து, அதற்கேற்ப செயல்பட வேண்டும். தற்போது, 'ஏஐ' உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் வாயிலாக, வழக்குகள் தொடர்பான தகவல்கள் மற்றும் தீர்ப்புகளை, ஒரு நிமிடத்தில் பெற முடிகிறது.இது எதிர்காலத்தில், சட்டத்துறையில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை கணிக்க முடியாத சூழல் உருவாகி உள்ளது. எனவே, அதற்கேற்ப வழக்கறிஞர்கள் தங்கள் வாதாடும் திறன் மற்றும் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதேபோல, இளம் வழக்கறிஞர்கள் தங்களது தொழில் தர்மத்தை பாதுகாக்க வேண்டும்.
வழக்கறிஞர்கள் தங்களின் வாதத்திறமையையும், சட்ட அறிவையும் மற்றவர்களுக்கு நீதி கிடைப்பதற்காக பயன்படுத்த வேண்டும். தங்களின் தனிப்பட்ட பிரச்னை மற்றும் சொந்த ஆதாயத்திற்காக, தவறாக பயன்படுத்தக்கூடாது. இத்துறையின் நற்பெயரை பாதுகாப்பது நம் அனைவரின் பொறுப்பு.
இவ்வாறு அவர் பேசினார்.
வழக்கறிஞர், டாக்டர் தொழில் தர்மம் காக்க பண ஆசை கூடாது. நியாயம் பக்கம் வாதிட வேண்டும். நல்ல தீர்வு பெற்று கொடுத்தோம் என்ற மன மகிழ்ச்சி கொள்ள வேண்டும். ஒரு வழக்கில் இரு பக்கம் நியாயம் இருக்காது. அநியாயத்திற்கு வாதிட பணம் பெற்று தொழில் அதர்மம் கடைபிடிக்க கூடாது. காலம் கடந்த கூடாது. பாராளுமன்றம் சட்டம் மூலம் ஒழுங்கு செய்ய நீதித்துறை ஒத்துழைக்க வேண்டும். நீதிமன்றம் நாட்டை விட்டு விலகி, தனியாக செயல்படுகிறது. இந்த முடிவு ஆபத்தானது. தீவிரவாதிகள் நீதியை கைபற்றி விடுவர். அரசின் உள் இயங்க வேண்டும்.
நாட்டில் என்ன நடக்கிறது என உச்ச மன்ற நீதிபதிக்கே தெளிவாக புரிந்த்துள்ளது .. ..
பாரில் கையில் மதுகிளாஸுடன் உண்மை சொல்பவர்கள் கோர்ட்டில் கையில் கீதையுடன் பொய் சொல்பவர்களை விட அதிகம்
பொய் சொன்னாத்தான் வக்கீல். அதுதான் தொழில் தர்மம்.மேலும்
-
அர்னாப் புயல் எதிரொலி; ஆந்திரா, ஒடிசாவில் சூறைக்காற்றுடன் கொட்டியது கனமழை
-
இஸ்ரேல் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு; அதிபர் நெதன்யாகுவுக்கு பின்னடைவு
-
12,000 வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கும் அபாயம்! தொடர் கண்காணிப்பில் மாவட்ட அதிகாரிகள்
-
மேற்கு ஆசிய பதற்றம்; நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்: பிரிக்ஸ் பார்லிமென்ட் மன்றம் வலியுறுத்தல்
-
5 தொகுதி இடைத்தேர்தல்: ஸ்டாலின் வியூகத்தை முறியடிக்க த.வெ.க., அதிரடி திட்டம்
-
வாகனத்தில் 225 கிலோ குட்கா கடத்திய இருவருக்கு 'காப்பு'