ஏலகிரி மலைப்பாதையில் மண் சரிவு பாறை உருண்டு போக்குவரத்து பாதிப்பு
ஜோலார்பேட்டை: ஏலகிரி மலையில் மண் சரிவு ஏற்பட்டு, சாலை நடுவே பாறை உருண்டு விழுந்ததில், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருப்பத்துார் மாவட்டத்தில், திருப்பத்துார், ஆம்பூர், கந்திலி, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஜோலார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில், சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால், பல்வேறு முக்கிய சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
மழையால், ஏலகிரி மலையில் சுற்றுலா பயணியர் வருகை குறைந்து, படகு சவாரி இல்லம் உள்ளிட்ட அனைத்து இடங்களும் வெறிச்சோடி காணப்பட்டன. நேற்று ஏலகிரி மலையில், எட்டு இடங்களில் மண் சரிந்து பாதிப்பு ஏற்பட்டது.
இதில், ஆறாவது கொண்டை ஊசி வளைவில் நேற்று காலை, 11:00 மணியளவில் பாறை உருண்டு, சாலை நடுவே விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த நேரத்தில் அவ்வழியாக வாகனங்கள் செல்லாததால், விபத்து தவிர்க்கப்பட்டது.
நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் சாலை பணியாளர்கள், சாலையில் சரிந்த மண் மற்றும் பாறைகளை அகற்றி, போக்குவரத்தை சீரமைத்தனர். இதனால் அப்பகுதியில், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும்
-
கைகொடுக்கும் மொழி... ஆர்வம் தான் வழி! பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை
-
பல நாடுகளில் இது தேர்தல் காலம்
-
வேலை உறுதி திட்ட பணிகளை நிறுத்த எதிர்பார்ப்பு : விவசாய பணிக்கு உதவ விவசாயிகள் வேண்டுகோள்
-
பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனில் மின்தடையால் பயணிகள் அவதி: தனி 'டிரான்ஸ்பார்மர்'கள் அமைக்க வலியுறுத்தல்
-
'உணவு சந்ததை'யில் சாம்பார், குருமாவுக்கு 'மவுசு' இட்லி, சப்பா த்தியைவிட 'சை டிஷ்' விலை அதிகம்
-
சூதாடிய 8 பேர் கைது