அரசு அலுவலகத்தில் முகாம் த.வெ.க., நடத்தியதால் சர்ச்சை

குன்றத்துார்: குன்றத்துார் மேத்தா நகரில், குன்றத்துார் தாலுகா அலுவலகம் உள்ளது. ஞாயிற்றுக்கிழமையான இன்று (அக்.,25), இந்த அலுவலகம் விடுமுறையால் மூடப்பட்டிருந்தது.

இந்நிலையில், குன்றத்துார் த.வெ.க., சார்பில் இலவச கண் மருத்துவ முகாம், தாலுகா அலுவலகத்தில் இன்று நடந்தது. தாலுகா அலுவலகத்தின் பிரதான கதவும் திறந்தே இருந்தது.

முக்கிய ஆவணங்கள் இருக்கும் அலுவலகத்தில், த.வெ.க., நிர்வாகிகள் சென்று வந்ததும், அரசு அலுவலகத்தில் ஆளும் கட்சியாக த.வெ.க., சார்பில் மருத்துவ முகாம் நடந்தது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement