ரேஷன் பொருட்களை பெருச்சாளிகள் சூறை

திருப்பூர்: திருப்பூர் வடக்கு தாலுகாவுக்கு உட்பட்ட அண்ணா நகர் ரேஷன் கடை பத்மாவதிபுரத்தில் அமைந்துள்ளது. அதன் அருகிலேயே வீடு வீடாக சேகரிக்கும் குப்பை கொட்டப்படுகிறது. நீண்ட நாட்களாக குப்பை கிடப்பதால் பெருச்சாளி தொல்லை அதிகரித்துள்ளது.

பொதுமக்கள் கூறுகையில், ‘ரேஷன் கடை அருகே குப்பை அதிகளவு சேர்ந்துள்ளது. ஏற்கனவே பெருச்சாளி தொல்லை இருந்து வந்தது, தற்போது அதிகரித்துள்ளது. ரேஷன் கடைக்குள் பெருச்சாளிகள் புகுந்து அரிசி, பருப்பு, கோதுமை என ரேஷன் பொருட்களை சூறையாடி விடுகின்றன. அதிகளவு பொருட்கள் சேதமாகிறது. துர்நாற்றமும் வீசுகிறது. ரேஷன் கடை அருகே குப்பை கொட்டுவதை தடுப்பதுடன், பெருச்சாளிகள் புகாதபடி தடுக்க வேண்டும்’ என்றனர்.

Advertisement