பாசன வாய்க்கால் துார்வாராததால் 500 ஏக்கர் நெற்பயி்ரகள் நீரில் மூழ்கி நாசம்
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே பாசன வாய்க்கால் துார்வாரப்படாததால், 500 ஏக்கர் நெல் வயல்கள் நீரில் மூழ்கியுள்ளன.
விருத்தாசலம் அடுத்த தொரவலுார், பரவலுார், கோமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த இரண்டு வாரங்களாக முன்பட்ட சம்பா நெல் சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், வடகிழக்கு பருவ மழையின் காரணமாக, விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரு நாட்களாக இரவு நேரங்களில் கன மழை பெய்தது.
இதன்காரணமாக, மேமாத்துார் அணைக்கட்டில் இருந்து வரக்கூடிய, பாசன வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் பாசன வாய்க்காலில் துார்வாரப்படாமல், நாணல்கள், கோரைப்புல், செடி கொடிகள் வளர்ந்து வாய்க்கால்கள் துார்ந்து போயுள்ளதால், வாய்க்கால்களில் மழைநீர் செல்லாமல், தொரவலுார் கிராமத்தில் சாகுபடி செய்யப்ப்டடுள்ள விவசாய நிலங்களை மூழ்கடித்து செல்கிறது.
இதனால், நெல் சாகுபடி செய்யப்பட்ட வயல்கள் கடல்போல் காட்சி அளிக்கிறது. இதனால் நெற்பயிர்களின் வேர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கிராம விசாயிகள் கூறுகையில், ஒருநாள் மழைக்கே, விளைநிலங்கள் கடல்போல் காட்சி அளிக்கிறது. மழை தொடர்ந்தால், சாகுபடி செய்யபட்ட நெற்பயிர்கள் அனைத்தும் அழுகும் நிலை உள்ளது. ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்து சாகுபடி செய்துள்ளோம்.
பாசன வாய்க்காலை துார்வாராமல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டியதால், எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு, பாசன வாய்க்காலை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
மேலும்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி
-
மக்களே நோட் பண்ணிக்கோங்க; அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க ஆன்லைனில் முன்பதிவு
-
அரசு பணிகளுக்கான வயது வரம்பு உயர்வு மறுபரிசீலனை அவசியம்: பாலகுருசாமி
-
மின் இணைப்பு கோரிய விண்ணப்பங்கள் உடனடியாக தீர்வு காண வாரியம் உத்தரவு
-
தீபாவளிக்கு மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கவில்லை அமைச்சர் விக்னேஷ் பேட்டி