திருப்பூரில் அப்போலோ கிளினிக் மாதந்தோறும் மருத்துவ முகாம்கள்

திருப்பூர்: திருப்பூர் காந்தி நகர், 80 அடி ரோடு ஹரி டவர்ஸில் உள்ள, அப்போலோ கிளினிக்கில் தலை, கழுத்து பாதிப்பு மற்றும் சீரமைப்புக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. சென்னை அப்போலோ மருத்துவமனை மூத்த நிபுணர் டாக்டர் தீபக் பாலசுப்ரமணியன் நோயாளிகளுக்கு பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கினார். திருப்பூர் அப்போலோ கிளினிக் நிர்வாக இயக்குனர் ஸ்ரீஹரி முன்னிலை வகித்தார். மக்கள் தொடர்பு அலுவலர் பாலாஜி வரவேற்றார். நிர்வாக இயக்குநர் ஸ்ரீஹரி கூறுகையில், ‘‘சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்கும் சிறப்பு மருத்துவ முகாம்கள் மாதம் தோறும் நடத்தப்படுகிறது. அப்போலோ மருத்துவமனை பெருநகரங்களைக் கடந்து பிற பகுதிகளிலும் தனது சேவையை இதன் மூலம் வழங்குகிறது. திருப்பூர் அப்போலோ கிளினிக் தினமும் காலை 9:00 முதல் இரவு 9:00 மணி வரை செயல்படும்’’ என்றார்.

திருப்பூர், காந்தி நகரில் உள்ள அப்போலோ கிளினிக்கில், தலை, கழுத்து பாதிப்பு மற்றும் சீரமைப்புக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. மூத்த மருத்துவ நிபுணர் தீபக் பாலசுப்ரமணியம் பரிசோதனை மேற்கொண்டு நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

Advertisement