அமைச்சரிடம் ஆப்பநாடு மறவர் சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு
முதுகுளத்துார்: கமுதி அருகே பசும்பொன் வந்த அமைச்சர் நிர்மல்குமாரிடம் ஆப்பநாடு மறவர் சங்க தலைவர் சண்முகபாண்டியன் கோரிக்கை மனு அளித்தார்.அதில் கூறியிருப்பதாவது:
பசும்பொன்னில் அரசு சார்பில் ரூ.3 கோடியில் அமைக்கப்படவுள்ள மண்டபத்திற்கு புதிய திட்ட மதிப்பீடு, கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து முக்கிய பிரமுகர்கள் ஓய்வு அறைகள், நுாலகம் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய மண்டபமாக மாற்றி அமைக்க வேண்டும். தேவர் நினைவிடம், நுழைவு வாயில் பகுதியில் வர்ணம் பூச வேண்டும்.
சேதமடைந்துள்ள முளைப்பாரி, பால்குடம், முடிக்கணிக்கை மண்டபங்கள், கழிப்பறைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை புதிதாக அமைக்க வேண்டும் என்றனர். தியான மண்டபம் பகுதியில் இளைஞர்கள், பெண்கள் அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி படிக்கும் வகையில் நவீன பொது நுாலகம், உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நிர்மல்குமார் கூறினார். ஆப்பநாடு மறவர் சங்க நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
மேலும்
-
பிரெஞ்ச் ஓபன் பாட்மிண்டன் பைனலில் சிந்து ஏமாற்றம்; கொரிய வீராங்கனையின் தொடரும் ஆதிக்கம்
-
சொந்த ஆதாயத்திற்கு சட்டத்தை பயன்படுத்தக்கூடாது வழக்கறிஞர்களுக்கு சுப்ரீம்கோர்ட் நீதிபதி அறிவுரை
-
ஆட்சீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் விமரிசை
-
புதுயுகம் பிறந்திருக்கிறது சபாநாயகர் பிரபாகர் பெருமிதம்
-
ரூ.22 கோடியில் ஒப்பந்தம் விட்டும் தெருவிளக்குகள் ஒளிராததால் அச்சம்: இருளில் தவிக்கும் ஆவடி மாநகராட்சி
-
பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலியில் மீண்டும் போராட்டம்: அலறும் ஐரோப்பா