நகராட்சி அலுவலகத்தில் ரூ.62 ஆயிரம் சிக்கியது
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.62,500 சிக்கியது.
இன்று (அக்.,23) மதியம் 3:30 மணியளவில் தேவகோட்டை நகராட்சி அலுவலகத்திற்கு சிவகங்கை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. தங்கராமன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், சேசுராஜ் உட்பட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வந்தனர். பொறியியல், நகரமைப்பு, வருவாய் பிரிவுகளின் கதவுகளை மூடி சோதனையில் ஈடுபட்டனர். ஒவ்வொரு அலுவலரின் இருக்கையிலும் சோதனை நடந்தது. கணக்கில் வராத ரூ. 62 ஆயிரத்து 500, ஜீபே மூலம் ரூ.50 ஆயிரத்து 500 பரிமாற்றம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இப்பணம் காண்ட்ராக்டர்களிடம் இருந்து பெறப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்தது. போலீசாரின் சோதனை இரவு வரை நீடித்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசு பஸ் மண்ணில் புதைந்ததில் 6 பேர் பலியானதாக அச்சம்
-
வார இறுதி நாள் இன்றைய நிலவரம்; 5 நாட்களில் சவரனுக்கு ரூ.4,080 சரிந்த தங்கம் விலை சற்று உயர்வு
-
நீலகிரியில் ஆங்காங்கே மண் சரிவு; 2 பேர் காயம்
-
ஊக்கம் அளிக்கும் தன்னலமற்ற சேவை; இந்தோ-திபெத் எல்லை காவல் படைக்கு பிரதமர் மோடி பாராட்டு
-
விமான பயண கட்டணத்தை குறைக்க இணைந்து செயல்படணும்; முதல்வர் விஜய்க்கு மத்திய அமைச்சர் நன்றி
-
தமிழகத்தில் பரவலாக மழை; நீலகிரியில் கொட்டியது கனமழை
Advertisement
Advertisement