கின்னஸ் சாதனை படைத்த சமையல் கலை நிபுணர் 'செப்' தாமு காலமானார்
-நமது நிருபர்-
பிரபல சமையல் கலைஞர், செப் தாமு உடல்நலக் குறைவால் காலமானார். கடந்த ஒருவாரமாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் தாமு. இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி இன்று (அக்., 25) காலை மறைந்தார்.
தாமோதரன் எனும் இயற்பெயர் கொண்ட தாமு, சமையல் கலையில் கைதேர்ந்தவர். இந்தியா முழுக்க பல்வேறு ஸ்டார் ஓட்டல்களில் பணியாற்றி உள்ளார். உலகின் பலவகையான உணவுகளையும் சமைத்து அசத்தி உள்ளார். 2010ம் ஆண்டில் தொடர்ந்து 24 மணிநேரம் 30 நிமிடங்கள் 12 வினாடிகளில் 617 விதமான உணவு வகைகளை சமைத்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
2004-ல் சென்னை பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட உணவக மேலாண்மை மற்றும் சமையல் கலைத் தொழில்நுட்பத்தில் முனைவர் பெற்ற முதல் இந்தியச் சமையல்காரர் என்ற பெருமையையும் பெற்றார். சமையல் கலையில் இவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.
சமையல் தாண்டி சமையல் நிகழ்ச்சியிலும் நடுவராக பங்கேற்றுள்ளார். தவிர சமையல் நிகழ்ச்சியையே கலகலப்பாக வழங்கும் விஜய் டிவியின் ‛குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் முதன்மை நடுவராகவும் திகழ்ந்தார். இதன்மூலம் மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார். ‛கள்ளப்படம், ஒரு பக்க கதை' உள்ளிட்ட ஓரிரு படங்களிலும், வெப்தொடர் ஒன்றிலும் நடித்துள்ளார்.
செப் தாமுவின் உடல் சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
@block_P@
வேதனை அளிக்கிறது!
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், '' பிரபல சமையல் கலைஞர் செப் தாமு என்று அழைக்கப்படும் கே.தாமோதரனின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. தனது சமையல் திறமையாலும், தனித்துவமான அணுகுமுறையாலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வாயிலாகச் சமையல் கலையை மக்களிடம் கொண்டு சேர்த்தவர்.
2010ம் ஆண்டில் தனிநபரின் மிக நீண்ட சமையல் மாரத்தான் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்ததோடு, பத்மஸ்ரீ விருதும் பெற்ற பெருமைக்குரியவர். அவரது மறைவு சமையல் கலைத் துறைக்குப் பேரிழப்பாகும். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், சமையல் கலையை நேசிக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.block_P
வீடியோ பாருங்கள்!
செப் தாமு காலமானார்; சமையலில் உலக சாதனை படைத்தவர்!
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
நல்ல சமையற்கலை வல்லுனர். ஆழ்ந்த இரங்கல்கள்.
ஆழ்ந்த இரங்கல். சென்னை எங்கள் வீட்டு பக்கத்தில் தான் அவர் வீடு. ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
காமராஜர் அரங்கில் ஒருமுறை இவர் சமையலை ருசி பார்த்திருக்கேன். ஆனால் நல்லமனிதர்.
ஆழ்ந்த. இரங்கல்கள் . என்ன. செய்வது, மரணத்துக்கு. ஏதோவொரு. காரணம். கூறவாவது. ஒரு. உடல்நலம். குறைவது. நடக்கிறது
மிகவும் நல்ல மனிதர் ஓம் சாந்தி ஓம்
அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
அரசு மரியாதை உண்டா?
இவர் சினிமாவில் இல்லை, சினிமாவில் அரசருக்கு சாமரம் விடும் வேடத்தில் நடித்திருந்தால் கூட அரசுமரியாதை உண்டு
A good soul and very positive attitude
ஓம் சாந்தி
சமைத்துச்சாப்பிட வேண்டும் என்பது உடலை சீக்கிரம் அழிவில் இருந்து பாதுகாக்கும். விடுதிகளில் சாப்பிடுவோர் அங்குள்ள சமையல் அறையை சிறிது பார்த்துவிட்டு வந்தால் பின்னர் ஒரு பொழுதும் அந்த விடுதியில் சாப்பிட மாட்டார்கள். இதை பலரது மண்டையில் ஏற்றியவர் தாமு. நற்கதிக்கு பிரார்த்திக்கிறேன்.