பாரா ஆசிய விளையாட்டில் வரலாற்று சாதனை; வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு
-நமது சிறப்பு நிருபர்-
பாரா ஆசிய விளையாட்டில் இந்திய நட்சத்திரங்கள் 97 பேர் 114 பதக்கம் வென்றனர். இதில் அதிகபட்சம் 24 பேர், ஹரியானாவை சேர்ந்தவர்கள். அடுத்து உ.பி., (13) உள்ளது. இந்த வரிசையில் தமிழகம் 3வது இடம் பெற்றது. தமிழகத்தை சேர்ந்த 9 வீரர், வீராங்கனைகள் 14 பதக்கம் வென்றுள்ளனர்.
ஒட்டுமொத்த தேசத்திற்கும் மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும் அளிக்கும் தருணமாகும். நமது குழுவில் இடம்பெற்ற ஒவ்வொரு வீரரின் மன உறுதியையும் நான் பாராட்டுகிறேன். ஒவ்வொரு விளையாட்டு வீரரும் இந்த வரலாற்றுச் சாதனையில் பங்களித்ததுடன், தங்கள் வெற்றிகளின் மூலம் எண்ணற்ற இந்தியர்களுக்கு ஊக்கமளித்துள்ளனர். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
@block_P@
அரசு துணை நிற்கும்!
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில், ''ஜப்பானில் நடந்த 5வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இந்தியாவின் சார்பில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகள் 3 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளமைக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தை சேர்ந்த பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் இடையறாத பயிற்சி, தளராத மன உறுதி, இலக்கை அடைவதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம் பல்வேறு சவால்களைக் கடந்து, பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ள ஒவ்வொரு வீரர், வீராங்கனையின் உழைப்பும், வெற்றியும் போற்றத்தக்கது. அவர்களின் சாதனைப் பயணம் தொடர்ந்திட வாழ்த்துகிறேன்.
அவ்வீரர், வீராங்கனைகளின் சாதனைகள், தமிழகத்தின் விளையாட்டுத் திறனையும், இளைஞர்களின் ஆற்றலையும் உலகறியச் செய்து, சர்வதேச அரங்கில் இந்தியாவின் பெருமையை மேலும் உயர்த்தியுள்ளது. சாதனை புரிந்துள்ள வீரர், வீராங்கனைகளுக்கும், சாதிக்கத் துடிக்கும் இளம் தலைமுறையினருக்கும் என்றும் உறுதுணையாக இருந்து, அவர்களின் திறமைகள் மேலும் வளரவும், வெற்றிகள் பல குவிக்கவும் அனைத்து நிலையிலும் தமிழக அரசு துணை நிற்கும் '' என குறிப்பிட்டுள்ளார்.block_P
மோடிஜியால் மட்டுமே இது சாதிக்க முடிந்தது...... திறமைக்கு முதலிடம் கொடுக்கப்பட்டதே இந்த வெற்றிக்கு அடிப்படை
வீரர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் நன்றிமேலும்
-
தீபாவளிக்கு முன் அகவிலைப்படி உயர்த்தப்படுமா? அக்.28க்காக காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள்
-
காரைக்குடி டூ மதுரைக்கு இடைநில்லா பஸ் அவசியம் பயணிகள் வலியுறுத்தல்
-
பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
-
விவசாய நிலத்தில் நிலத்தில் மருந்து தெளித்தல், களையெடுத்தல் பணி
-
சாலையில் கிடந்த நகையை ஒப்படைத்தவருக்கு பாராட்டு
-
நிலம் கையகப்படுத்த அளவீடு பணி துரிதம்