நண்பரின் 13 வயது மகள் கர்ப்பம் கொடூரனுக்கு சாகும் வரை சிறை
சேலம்: நண்பரின், 13 வயது மகளின் வாயில் துணியை அடைத்து, பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய காமக்கொடூரனுக்கு, சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சேலம், மஜ்ரா கொல்லப்பட்டியை சேர்ந்த பெயின்டர் ஞானமூர்த்தி, 43. இவர், உடன் பணிபுரியும் நண்பர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார். 2022ல், நண்பர், அவரது மனைவி வேலைக்கு சென்ற நிலையில், அவரது, 13 வயது மகள் மட்டும் வீட்டில் இருந்தார்.
அப்போது அங்கு சென்ற ஞானமூர்த்தி, வீட்டின் பின் வழியே சென்று கதவை தாழிட்டுக்கொண்டு, சிறுமி வாயில் துணியை அடைத்து பலாத்காரம் செய்துள்ளார்.
‘இதுகுறித்து பெற்றோரிடம் கூறினால், அவர்களை கொலை செய்து விடுவேன்’ என, மிரட்டியுள்ளார். சிறுமி பயந்து பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை. இதை சாதகமாக பயன்படுத்திய ஞானமூர்த்தி, சிறுமி தனியே இருக்கும்போது அடிக்கடி சென்று பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். சிறுமி கர்ப்பமடைந்தார்.
சூரமங்கலம் மகளிர் போலீசார், ஞானமூர்த்தியை கைது செய்தனர். சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றம், ஞானமூர்த்திக்கு சாகும் வரை சிறை, 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, நேற்று உத்தரவிட்டது.
மேலும்
-
பிற்படுத்தப்பட்டோர் தனிநபர் கடன் திட்டம் (Tag) சிறு தொழில் தொடங்க 25 லட்சம் ரூபாய் வரை கடன்
-
முளைக்குமா வயலில் தண்ணீர் தேங்குவதால் விதை நெல் இளையான்குடியில் மழையால் விவசாயிகள் கவலை
-
தற்காலிக சீரமைப்பு பணி வீண் சேதமடையும் சாலைகளில் அவதி
-
சேதமடைந்த பாசன கால்வாய் சீரமைத்தால் விவசாயிகள் பயன்
-
பருவமழையால் இதுவரை 14 பலி…. மழை பாதிப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டைன் தகவல்
-
ஆஸ்திரேலிய விசா: இந்தியர்களுக்கு பயோமெட்ரிக் பதிவு கட்டாயம்!