போலீஸ் ஏட்டுவின் விஸ்வரூப ஊழல்: ரூ.65 கோடிக்கும் மேல் சொத்து குவிப்பு
இந்தூர்: ம.பி.,யில் மாதச் சம்பளம் வாங்கும் ஒரு போலீஸ் ஏட்டு, ரூ.65 கோடிக்கும் மேல் அசையாச் சொத்துகளை குவிந்திருப்பது, லோக்ஆயுக்தா போலீசாரின் தொடர் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் காவல் துறையில், தலைமை காவலராக பணியாற்றி வருபவர் பெரோஸ் கான். இவர் மீது வருமானத்துக்கு அதிகமாக பல மடங்கு சொத்து சேர்த்ததாக, லோக்ஆயுக்தா போலீசாருக்கு அடுக்கடுக்கான புகார்கள் வந்தன. இதையடுத்து, அவரது வீடு மற்றும் குடும்பத்துக்கு சொந்தமான இடங்களில் லோக்ஆயுக்தா அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். விசாரணையின் தொடக்கத்தில் சில கோடிகள் என மதிப்பிடப்பட்ட சொத்து மதிப்பு, ஆவணங்கள் அனைத்தையும் ஆராய்ந்த போது, பல கோடிகளாக உயர்ந்து, அதிகாரிகளை தலைசுற்ற வைத்துள்ளது.
பெரோஸ் கான், அவரது குடும்பத்தினர், நெருங்கிய கூட்டாளிகள் பெயர்களில் 50க்கும் மேற்பட்ட நிலங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், பிரம்மாண்ட வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளன. இதன் மதிப்பு 65 கோடி ரூபாயை விட அதிகம்.
75 லட்சம்:
காவல்துறையில் கடந்த 24 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் பெரோஸ் கானின் மொத்த பணிக்கால சம்பள வருமானம், சுமார் ரூ.75 லட்சம் தான். பிற சட்டப்பூர்வ வழிகளின் படி கணக்கிட்டாலும், அவரது வருமானம் அதிகபட்சமாக ரூ.1.94 கோடி மட்டுமே இருக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், வருமானத்திற்கு அதிகமான வகையில், ரூ.65 கோடிக்கும் மேல் அவர் சொத்துகளைக் குவித்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.
கட்டப்பஞ்சாயத்து:
பெரோஸ் கான் நீண்ட நாட்களாக பணிக்குச் செல்லாமல் முறைகேடாக விடுப்பில் இருந்தும், தனது போலீஸ் அதிகாரத்தைப் பயன்படுத்தி இடங்கள், நிலங்களை குறைந்த விலைக்கு மிரட்டி வாங்கியதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பெரோஸ் கான் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் காவல் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளுக்கும் பங்கு உள்ளதா என்ற கோணத்தில் லோக்ஆயுக்தா தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
அந்த லோக் அயுக்த போலீஸா படை தமிழ் நாட்டில் ஏற்படுமா ? முதல்வரே, கவனியுங்கள்,
அவர்கிட்ட நம் அதிகாரிகளை சிறப்பு பயிற்சி எடுக்க அனுப்பலாம்
மோடி கா டபுள் எஞ்சின் சர்கார் மே, சப் கா விகாஸ்.
பெயருக்கு ஏத்த மாதிரி விருமாண்டி பட கதாநாயகனுக்கு உள்ள புத்திதான்..
வெறும் ஆண்டி பாய் அவர் சரியா தான் போட்டிருக்காரு.₹ இருநூறில் சிந்தனை வராது.அங்க லோக் ஆயுக்தா இருந்ததால் பிடிபட்டார்.தமிழகத்தில் அந்த அமைப்பு இல்லை.அதனால் எடப்பாடிகளும் ஸ்டாலின்களும் இங்க மாட்டவில்லை.
ஐயோ பாவம் அரசியலிலே சேர்றதுக்கு முன்னாடி அகப்பட்டுக்கிட்டாரு
அங்கே பாஜக ஆளுது ன்னு போடலை ??
ஏன் இந்த இருட்டடிப்பு?
IVARU IDHAYE DRAVIDA MANNIL SEIDHAAL ORU PRACHNAYUM ILLAI
லோக் ஆயுக்தா ஏன் தமிழகத்தில் அனுமதிக்கவில்லை என்று புரிகிறதா மக்களே
மத்திய பிரதேசத்தில் என்று புரிந்து கொள்ளும் அளவுக்கு கூட மூளை வளர்ச்சி இல்லை.
பேர கேக்டாலே அதிருதுல்ல
இவன் ஏ2 இல்லை,மேலும்
-
டெட் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு விடுமுறை நாட்களில் சிறப்பு பயிற்சி; பள்ளிக்கல்வித்துறை திட்டம்
-
ரூ.1.90 கோடி பணிகள் திறப்பு 497 பேருக்கு நலத்திட்ட உதவி
-
ஸ்ரீரங்கம் கோவிலில் பர்தா அணிந்த பெண்; அடுத்தடுத்து சர்ச்சையால் அதிர்ச்சி
-
நிர்வாகிகள் பெயர் அழிப்பு போலீசில் த.வெ.க. புகார்
-
கூலி பிரச்னைக்கு நிரந்தர தீர்வு விசைத்தறியாளர்கள் முறையீடு
-
மாநில கால்பந்து போட்டி; மதுரை அணி வெற்றி