கூலி பிரச்னைக்கு நிரந்தர தீர்வு விசைத்தறியாளர்கள் முறையீடு

பல்லடம்: கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் பூபதி தலைமையிலான நிர்வாகிகள், அமைச்சர்கள் செங்கோட்டையன், அருண்ராஜ் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

பூபதி கூறியதாவது:

கடந்த 2014-ம் ஆண்டு முதல் கூலி உயர்வுக்காக போராடி வருகிறோம். 2021–-22-ம் ஆண்டு கூலி உயர்வை வலியுறுத்தி 32 நாள் வேலை நிறுத்தம், 7 நாள் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டோம். இதையடுத்து சோமனுார் ரகத்துக்கு 15 சதவீதமும், இதர ரகங்களுக்கு 10 சதவீதமும் கூலி உயர்த்தி வழங்கப்பட்டது. ஆனால் உயர்த்தப்பட்ட கூலியை ஜவுளி உற்பத்தியாளர்கள் வழங்க மறுக்கின்றனர்.

கோவை, திருப்பூர் கலெக்டர்களிடம் முறையிட்டோம். இரு கலெக்டர்களும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தும், விசைத்தறி உரிமையாளர்கள் மட்டுமே பங்கேற்கிறோம். ஜவுளி உற்பத்தியாளர்கள் பங்கேற்காமல் தவிர்க்கின்றனர். கடந்த காலங்களில் அமைச்சர்கள் முன்னிலையில் தான் தீர்வு காணப்பட்டது. அதேபோல் தற்போதும் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும்.

Advertisement