நிர்வாகிகள் பெயர் அழிப்பு போலீசில் த.வெ.க. புகார்
பல்லடம்: சுவர் விளம்பரத்தில் பெயரை அழித்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்லடம் நகர த.வெ.க. சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
பல்லடம் நகர த.வெ.க. செயலாளர் ராமமூர்த்தி அளித்துள்ள புகார்:
பல்லடம் நகர த.வெ.க. சார்பில், தமிழக அரசின் 100 நாள் சாதனை குறித்த சுவர் விளம்பரம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய சுவற்றில் எழுதப்பட்டுள்ளது. இதில் நகர செயலாளர் மற்றும் நிர்வாகிகள் சிலரின் பெயர்கள் இரவில் மர்ம நபர்களால் அழிக்கப்பட்டுள்ளது. இது நிர்வாகிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதுடன் அவமதிக்கும்படி உள்ளது. சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, மாவட்ட, நகர நிர்வாகிகளிடையே கோஷ்டி பூசல் ஏற்பட்டு, சுவர் விளம்பரத்தை சிலர் அழிக்க முயன்றனர். போலீசார் சமாதானப்படுத்தினர். இதையடுத்து இரவோடு இரவாக நகர நிர்வாகிகள் சிலரின் பெயர்கள் வெள்ளை பெயின்ட் கொண்டு அழிக்கப்பட்டுள்ளன. கோஷ்டி பூசலா அல்லது வேறு யாரேனும் செய்தார்களா என பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஒரு படம் மட்டும்
பல்லடம் நகர த.வெ.க. சார்பில் எழுதப்பட்டிருந்த சுவர் விளம்பரத்தில், நிர்வாகிகள் சிலரின் பெயர்கள் அழிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
பத்மஸ்ரீ விருது வென்ற, கின்னஸ் சாதனை படைத்த சமையல் கலை நிபுணர் தாமு காலமானார்
-
பாரா ஆசிய விளையாட்டில் வரலாற்று சாதனை; வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு
-
சவுதியில் தொடரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்; நவம்பர் 7 வரை ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை ரத்து
-
புயல் வருது… கனமழை கொட்டுது... 9 துறைமுகங்களில் 1ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
-
நெரூர் காசி விஸ்வநாதர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
-
27ல் பென்சனர் குறைதீர் கூட்டம்