ரூ.1.90 கோடி பணிகள் திறப்பு 497 பேருக்கு நலத்திட்ட உதவி
அவிநாசி: அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் அமைச்சர் அருண்ராஜ் கலந்துகொண்டு அவிநாசி மற்றும் திருமுருகன்பூண்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார்.
அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.23 கோடி மதிப்பில் 5 வகுப்பறை கட்டடம், திருமுருகன்பூண்டி நகராட்சி வார்டு எண் 22 சன்னதி தெருவில் ரூ.45 லட்சம் மதிப்பில் பொதுக்கழிப்பிடம் மற்றும் ரூ.5.76 லட்சம் மதிப்பில் சிறுநீர் கழிப்பிடம், வார்டு எண் 25 பாரதி நகரில் ரூ.16.50 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையம் என ரூ.1.90 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை அவர் திறந்து வைத்தார்.
பின்னர் வருவாய்த் துறை சார்பில் 159 பேருக்கு ரூ.1.18 கோடி மதிப்பில் இலவச வீட்டு மனை பட்டா மற்றும் இ-பட்டா, வழங்கல் துறை சார்பில் 300 பேருக்கு குடும்ப அட்டை, வேளாண்மை துறை சார்பில் 10 பேருக்கு ரூ.6.69 லட்சம் மதிப்பில் நுண்ணீர் பாசன கருவிகள், தோட்டக்கலை துறை சார்பில் 5 பேருக்கு ரூ.3.10 லட்சம் மதிப்பில் வெங்காய சேமிப்பு கடனுதவி, வேளாண் பொறியியல் துறை சார்பில் புதர் வெட்டும் கருவி, குறு, சிறு நடுத்தர தொழில் துறை சார்பில் 4 பேருக்கு ரூ.32.73 லட்சம் மதிப்பில் கடனுதவி, மருத்துவத் துறை சார்பில் 5 பேருக்கு ஊட்டச்சத்து பெட்டகம் என மொத்தம் 497 பயனாளிகளுக்கு ரூ.1.63 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அமைச்சர் அருண்ராஜ் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
மேலும்
-
பத்மஸ்ரீ விருது வென்ற, கின்னஸ் சாதனை படைத்த சமையல் கலை நிபுணர் தாமு காலமானார்
-
பாரா ஆசிய விளையாட்டில் வரலாற்று சாதனை; வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு
-
சவுதியில் தொடரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்; நவம்பர் 7 வரை ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை ரத்து
-
புயல் வருது… கனமழை கொட்டுது... 9 துறைமுகங்களில் 1ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
-
நெரூர் காசி விஸ்வநாதர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
-
27ல் பென்சனர் குறைதீர் கூட்டம்