த.வெ.க., கூட்டணி அரசை அடிக்கடி விமர்சிப்பதா? ஜோதிமணி எம்.பி., மீது காங்., நிர்வாகிகள் காட்டம்
- நமது நிருபர் -
த.வெ.க., கூட்டணியில் இருந்தபடியே, த.வெ.க., அரசையும், த.வெ.க.,வையும் விமர்சித்து வரும், கரூர் தொகுதி காங்., - எம்.பி., ஜோதிமணி மீது, காங்கிரசார் அதிருப்தியில் உள்ளனர்.
சட்டசபை தேர்தலுக்கு பின், தி.மு.க., கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறி, த.வெ.க., ஆட்சிக்கு ஆதரவு அளித்ததோடு, அமைச்சரவை யிலும் இடம் பெற்றுள்ளது. முதல்வர் விஜயின் செல்வாக்கு மற்றும் த.வெ.க., வளர்ச்சியை, வரும் 2029 லோக்சபா தேர்தலில் பயன்படுத்தவும் காங்., திட்டமிட்டு உள்ளது. அதிக எம்.பி.,க்களை பெற்று, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலை பிரதமராக்க வியூகம் வகுக்கப்பட்டது.
ஆனால், முதல்வர் விஜயை, பிரதமர் வேட்பாளராக, த.வெ.க., அமைச்சர்கள் கூறி வருவதால், காங்கிரசாரிடம் அதிருப்தி ஏற்பட்டது. எனினும், தமிழகத்துக்கு ராகுல் வந்தபோது, முதல்வர் விஜயை சந்தித்ததன் வாயிலாக அதிருப்தி மறைந்தது. இந்த சூழ்நிலையில், த.வெ.க., ஆட்சியை விமர்சித்து, காங்., - எம்.பி., ஜோதிமணி அடிக்கடி கருத்து தெரிவிப்பது, காங்கிரசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, காங்., நிர்வாகிகள் கூறியதாவது: தாராபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா கைதானபோது, 'ஒரு பெண்ணை, முறையான காரணம் கூறாமல், இரவு உடையில் கைது செய்து அழைத்து செல்ல வேண்டிய அவசியம் என்ன?' என, த.வெ.க., அரசை ஜோதிமணி கண்டித்தார். இதுபோல, தி.மு.க.,வை சேர்ந்த சென்னை மேயர் பிரியா குறித்து, சமூக வலைதளங்களில் த.வெ.க.,வினர் சிலர் வெளியிட்ட கருத்துக்களையும் ஜோதிமணி கண்டித்தார்.
'ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளம் பெண் பிரியா, மேயராக சிறப்பாகச் செயல்படுகிறார். அவரை தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்துவதை ஏற்க முடியாது. இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?' என, கேள்வி எழுப்பினார்.
த.வெ.க., அரசுக்கு எதிராக வெளிப்படையாக ஜோதிமணி கேள்வி எழுப்பியதை, காங்., நிர்வாகிகள் விரும்பவில்லை. த.வெ.க., அமைச்சரவையில், காங்கிரசைச் சேர்ந்த இருவர் இடம் பெற்றுள்ளனர். கூட்டணி தர்மத்தை மதித்து, த.வெ.க.,வுடன் இணக்கமாக இருப்பதை விட்டு, தேவையில்லாமல் தி.மு.க.,வுக்கு ஆதரவாக ஜோதிமணி கருத்து தெரிவிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
டில்லி மேலிடம் அல்லது தமிழக காங்கிரஸ் தலைமையிடம் ஒப்புதல் பெற்று, கருத்து தெரிவிக்க வேண்டும். த.வெ.க., - காங்கிரஸ் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த, தி.மு.க.,வினர் முயற்சி செய்கின்றனர்; அதை முறியடிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
அந்தம்மா சுதந்திரமா உண்மையை பேசுனா மத்தவங்களுக்கு கடுப்பா தான் இருக்கும்?
இந்த அம்மணிக்கு வாயில சனி. இப்படியே தான் அவங்க வழக்கமே.
ராகூலை விட விஜய் பிரதமர் பதவிக்கு சிறந்த மேலான தேர்வு. ராகூல் பார்ட் டைம் அரசியல்வாதி. ஒன்றுக்கும் உதவமாட்டார்
முக்கனியில் சிறந்த கனி இக்கனி அந்த கனியை பிடிக்கும் என்பதால் ஜோதிமணி எம்.பி கூட்டணி கட்சி TVKvai விமர்சனம் செய்கிறார். ஆனால் நைட்டியுடன் NTK அம்மாவை கைது செய்தது எனக்கு பிடிக்கவில்லை. ஒரு நோட்டீஸ் கொடுத்து அந்த அம்மாவை வர சொல்லி இருக்க வேணும். TVKavil யாரோ ஒருவர் முதல்வர் விஜய்யை தவறாக வழிநடத்துகிறார். இது நல்லதுக்கு அல்ல . இது திருட்டு திமுக திரும்ப வர வழி வகுக்கும்
probably wants
ஜெயலலிதா அம்மையாரை அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் கட்டு மரத்தில் இருந்து கடைசி அயோக்கியன் வரை பேசினார்கள்.
அப்போ ஜோதிமணி அவர்கள் என்ன செய்தார்கள்?
எங்கே போனது அறச் சீற்றம்? தனக்கு மாநிலத் தலைவர் பதவி கிடைக்காததால் குழப்பம் ஏற்படுத்துகிறார்.
உதறியதில் இருந்தே லிமரன்ஸ் மோசமாகிவிட்டது
இவள் கவிதாயினிஇன் pinami. நாடாளுமன்ற சபாநாயகர்யே தாக்கத் துணிந்த urpan maxal