கந்து வட்டி வசூலித்த குறிஞ்சிப்பாடி பெண் கைது
கடலுார்: கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடியை சேர்ந்த 33 வயது வாலிபர். குறிஞ்சிப்பாடி, சாவடி பஸ் நிறுத்தம் அருகில் ஓட்டல் நடத்தி வருகிறார். 2024ம் ஆண்டு ஆகஸ்டில் ஓட்டலுக்கு சாப்பிட வந்த டி.பாளையம் ராமலிங்கம் மனைவி உமா, 45; என்பவரின் அறிமுகம் ஏற்பட்டது. ஓட்டலை விரிவுப்படுத்த வட்டிக்கு பணம் தருவதாக உமா கூறியதன் பேரில், வாலிபர், 20,000 ரூபாய் கடன் வாங்கி, அதனை 3 மாதங்களில் செலுத்தினார்.
அதையடுத்து, 2025ம் ஆண்டு ஜூலையில் உமாவிடம் 1 லட்சம் ரூபாய் தின வட்டிக்கு கடன் வாங்கி, வட்டி மற்றும் அசலுடன் சேர்த்து 2 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். அடுத்து, 3 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினார். அதற்கு வட்டி மட்டுமே 5 லட்சத்து 9 ஆயிரத்து 660 ரூபாய் கொடுத்துள்ளனர். ஆனால், அசல் தொகை 30 ஆயிரம் ரூபாய் மட்டுமே கழிந்தாக உமா கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த வாலிபர் கேட்டபோது, வாலிபரிடம் இருந்து நிரப்பப்படாத புரோ நோட்டில் கையொப்பம் வாங்கியதை பயன்படுத்தி அதில், 10 லட்சம் ரூபாய் தர வேண்டும் என கோர்ட்டில் புகார் கொடுப்பதாக உமா மிரட்டினார். புகாரின் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், உமாவை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், குறிஞ்சிப்பாடி வாலிபர் உள்ளிட்ட பலரிடம் கந்து வட்டி வசூலித்ததை ஒப்புக் கொண்டார். உடன், போலீசார் நேற்று முன்தினம் வழக்குப் பதிந்து உமாவை கைது செய்தனர்.
மேலும்
-
சவுதியில் தொடரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்; நவம்பர் 7 வரை ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை ரத்து
-
புயல் வருது… கனமழை கொட்டுது... 9 துறைமுகங்களில் 1ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
-
நெரூர் காசி விஸ்வநாதர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
-
27ல் பென்சனர் குறைதீர் கூட்டம்
-
பணம், தங்க நகை திருடிய மூவர் கைது
-
பாதுகாப்பு நடவடிக்கையை கடைப்பிடிக்காத பட்டாசு கடைகள் மீது நடவடிக்கை பாயும்