ஆலோசனைக் கூட்டம்

மானாமதுரை: மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் மானாமதுரை சட்டசபை தொகுதியில் உள்ள ஓட்டுச்சாவடிகளை மறுசீரமைப்பு செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ராஜா சிங் தலைமையில் நடந்தது. மானாமதுரை தாசில்தார் மகாதேவன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மானாமதுரை சட்டசபை தொகுதிக்குட்பட்ட மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் தாலுகாவிற்கு உட்பட்ட அனைத்து கட்சிகளின் ஒன்றிய, நகர, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருப்புத்துார் தாலுகா அலுவலக கூட்ட அரங்கில் தாசில்தார் மங்கையர்திலகம், தேர்தல் துணைத்தாசில்தார் (திருப்புத்தூர்) ரேணுகாதேவி, (சிங்கம்புணரி) உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தனர். அதிகாரிகள் கூறுகையில் 'தொகுதியில் 368 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. வாக்காளர்கள் அதிகமாக இருந்தால் கூடுதலாக ஓட்டுச்சாவடிகள் அமைப்பதற்கான சாத்தியக்கூறு, ஓட்டுச்சாவடி கட்டடங்களின் உறுதித்தன்மை, சேதம் குறித்து ஆய்வு நடத்தப்படும். பழுதடைந்த கட்டடங்கள் பராமரிப்பு மேற்கொள்ளப்படும். தேவைப்பட்டால் ஓட்டுச்சாவடி அதே பகுதியில் வேறு கட்டடங் களுக்கு மாற்றப்படலாம். ' என்றனர்.

முதுநிலை வருவாய் ஆய்வாளர்(தேர்தல்) கிருஷ்ணரூபன் நன்றி கூறினார்.

Advertisement