கட்டட ஒப்பந்ததாரிடம் ரூ. 62 லட்சம் மோசடி: சைபர் கிரைம் கும்பல் கைவரிசை
புதுச்சேரி: அரும்பார்த்தபுரத்தை சேர்ந்தவர் அய்யனார் மணிகண்டன், 39; கட்டட காண்ட்ராக்டர். இவர் திருமணத்திற்காக மேட்ரிமோனி இணையதளத்தில் பதிவு செய்திருந்தார்.
இதையடுத்து, அவரை ரோஷினி என்பவர் தொடர்பு கொண்டு பேசினார். அவர், ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என, ஆசை வார்த்தை கூறினார். இதனை நம்பிய அய்யனார் மணிகண்டன் ரூ. 1 லட்சத்தை முதலீடு செய்தார். அதில் லாபம் கிடைக்காததால் அவர் இது தொடர்பாக ரோஷினிடம் கேட்டார். அதற்கு ரோஷினி ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் மட்டுமே லாபம் கிடைக்கும் என்று தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த அய்யனார் மணிகண்டன், ரோஷினிடம் பேசுவதை நிறுத்தி விட்டார்.
இந்நிலையில் அய்யனார் மணிகண்டனை யு.கே.,வில் இருந்து அகிலா என்பவர் தொடர்பு கொண்டு பேசி, அவரை, திருமண செய்து கொள்வதாக கூறினார்.
சந்தேகமடைந்த அவர், அகிலாவின் குடும்பத்தினரிடம் பேச வேண்டும் என்றார். அதையடுத்து அகிலாவின் தாய் சரோஜினி, சகோதரர் அபிஜித், சகோதரி அபிநயா ஆகியோர் அய்யனார் மணிகண்டனிடம் திருமணம் குறித்து பேசி நம்ப வைத்தனர்.
அதன்பின் அவரும், அகிலாவும் மொபைல் போனில் பேச ஆரம்பித்தனர். இந்நிலையில் அகிலாவின் சகோதரர் அபிஜித், அய்யனார் மணிகண்டனை தொடர்பு கொண்டு நாங்கள் இந்தியாவில் தொழில் ஆரம்பிக்க உள்ளதால் பணம் தேவைப்படுகிறது.
அதற்காக டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி, ஒரு குழுவில் அய்யனார் மணிகண்டனை இணைத்துள்ளார்.
இதனை நம்பி அவர் பல்வேறு தவணையாக ரூ.62 லட்சம் முதலீடு செய்தார். அதற்கான லாப தொகையை எடுக்க முயன்றபோது முடியவில்லை. இதுகுறித்து அபிஜித், அகிலா ஆகியோரை தொடர்பு கொண்ட போது அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை.
தான் ஏமாற்றப்பட்டத்தை அறிந்த அய்யனார் மணிகண்டன், கோரிமேடு சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
பத்மஸ்ரீ விருது வென்ற, கின்னஸ் சாதனை படைத்த சமையல் கலை நிபுணர் தாமு காலமானார்
-
பாரா ஆசிய விளையாட்டில் வரலாற்று சாதனை; வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு
-
சவுதியில் தொடரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்; நவம்பர் 7 வரை ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை ரத்து
-
புயல் வருது… கனமழை கொட்டுது... 9 துறைமுகங்களில் 1ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
-
நெரூர் காசி விஸ்வநாதர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
-
27ல் பென்சனர் குறைதீர் கூட்டம்