பள்ளியில் சாதிய வன்கொடுமை; யாராக இருந்தாலும் நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்
சென்னையில் அமைச்சர் ராஜ்மோகன் அளித்த பேட்டி: எந்த பாலியல் குற்றச்சாட்டுகளையும் நாங்கள் குறைத்து மதிப்பிட மாட்டோம். தவெக நிர்வாகி, தவெக நிர்வாகி என்று நாம் சொல்கிறோம். ஆன்லைனில் தங்களை தாங்களாகவே இணைத்து கொண்டவர்கள் எல்லாம் நிர்வாகி ஆகிவிட மாட்டார்கள். ஒரு மாநில பொறுப்பில் இருக்கிறார் என்றால் சரி. தவெகவில் யாராக இருந்தாலும் தவறாக நடந்து கொண்டால் முதலில் கட்சியில் இருந்து நீக்கிடுவோம்.
உடனடியாக போலீசாருக்கு சொல்லி இவங்க மீது கருணை காட்டாதீங்கனு சொல்லுவோம். கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லுவோம். கட்சியில் இருந்து நீக்குவது கட்சி நடவடிக்கை; கைது செய்ய பரிந்துரை செய்வதே எங்களுடைய கொள்கை. அவர்கள் சொல்லுவது எல்லாம் அரசியல் குற்றச்சாட்டு. தவெகவில் எந்த பாரபட்சமும் காட்டமாட்டோம். மேயர் பிரியாவை அரசு புறக்கணிக்கவில்லை, அழைத்தால் தான் வருவேன் என்பது ஏற்புடையதல்ல.
மழை, வெள்ளத்தில் கட்சி பாகுபாடின்றி அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும். மேயர் பிரியா பாணியில் சொல்ல வேண்டும் என்று புரோட்டோகால் பார்க்காமல் வர வேண்டும். கோவையில் பள்ளியில் மாணவன் சாதிய ரீதியாக துன்புறுத்தப்பட்ட வழக்கில் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற விஷயங்களை நான் கேள்விப்படும் போது மிகவும் வேதனை அடைகிறேன்.
தவறு செய்தவர்கள் ஆசிரியர்கள், மாணவர்கள் என யாராக இருந்தாலும் நேர்மையான விசாரணை நடைபெறும். நான் பல அவமானங்களை சுமந்திருக்கேன். தமிழகத்தில் காணாமல் போகும் குழந்தைகளை மீட்கும் நடவடிக்கை துரிதமாக நடந்து வருகிறது. குழந்தைகளிடம் ஆசை வார்த்தை காட்டி அந்த குழந்தையின் தந்தை கூப்பிடுகிறார் என கூறி அழைத்து செல்கின்றனர். உலகம் முழுவதும் குழந்தைகள் கடத்தப்பட்டு வேறு வேறு இடங்களுக்கு உடனே மாற்றப்படுகிறார்கள். இவ்வாறு அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
சென்னையில் அமைச்சர் ராஜ்மோகன் பரபரப்பு பேட்டி; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
முழு பேட்டியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
பள்ளி, கல்லூரி போன்ற பொது இடங்களில் சாதி எண்ணம் நீங்க கல்வி, வேலையில் சாதி இட ஒதுக்கீடு சுழற்சி முறையில் அனைத்து சாதியினரும் பயன் பெறும் வகையில் சட்டம் இயற்றி, அமுல் படுத்த, சாதி மோதல் நீங்கும். இட ஒதுக்கீடு வேண்டாம் என்று திமுக, அண்ணா திமுக பாட்டாளி போன்ற கட்சிகள் போராடும். அது போல் மத சிறுபான்மை சலுகை சுழற்சி முறையில்.
ராம ரவிக்குமார் காடேஸ்வர சுப்பிரமணியம் போன்ற குபீர் போராளிகள் எங்கே போனார்கள்மேலும்
-
பத்மஸ்ரீ விருது வென்ற, கின்னஸ் சாதனை படைத்த சமையல் கலை நிபுணர் தாமு காலமானார்
-
பாரா ஆசிய விளையாட்டில் வரலாற்று சாதனை; வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு
-
சவுதியில் தொடரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்; நவம்பர் 7 வரை ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை ரத்து
-
புயல் வருது… கனமழை கொட்டுது... 9 துறைமுகங்களில் 1ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
-
நெரூர் காசி விஸ்வநாதர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
-
27ல் பென்சனர் குறைதீர் கூட்டம்