பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய வீடியோ பதிவிட்ட மும்பை நபர் கைது
நமது நிருபர்
மும்பையின் மஹிம் பகுதியில் முகமது ஹசன் அபு சர்மத் அக்தர், 33, என்பவர் வசித்து வந்தார். இவர் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது உடன் தொடர்பு வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
மும்பை மஹிம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே வைத்து பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் இவரை கைது செய்தனர். இவர் சமூக ஊடகங்கள் மற்றும் டெலிகிராம் குழுக்கள் மூலம் தேச விரோத, வன்முறையைத் தூண்டும் தீவிரவாதக் கருத்துகளையும், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் ஆடியோ உரைகளையும் பகிர்ந்துள்ளார்.
மும்பையில் ராபிடோ பைக் டிரைவராகவும், வாசனை திரவியங்கள் வியாபாரியாகவும் பணியாற்றி வந்து இருக்கிறார்.அவரது மொபைல் போனைப் பறிமுதல் செய்துள்ள அதிகாரிகள், பாகிஸ்தான் உளவு அமைப்புகளுடன் இவருக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினர். மும்பையின் மஹிம் பகுதி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
மேலும்
-
கான்கிரீட் காடு! திரும்பும் திசை எல்லாம்... கான்கிரீட் காடு!:குறைந்தது சாகுபடி பரப்பு
-
வாயை மூடி நடக்கவும்
-
விஜய் பாஜவுடன் நெருக்கம்: வந்தது காங்கிரஸுக்கு சந்தேகம்!
-
அமைச்சர்களிடம் மனு அளித்தால் நடவடிக்கை: அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை
-
மிஸ்டர் மூளைக்காரன்: 'பழக்கடை' மூர்த்தியும் 'விசில்' இளைஞனும்
-
சிற்பியின் சிந்தனையில் மகளுக்கு மரியாதை