விஜய் பாஜவுடன் நெருக்கம்: வந்தது காங்கிரஸுக்கு சந்தேகம்!

12

புதுடில்லி: சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தன், 62 வது பிறந்த நாளை கொண்டாடினார்.

ஜனாதிபதி, பிரதமர் உட்பட பலரும் அமித் ஷாவிற்கு வாழ்த்து தெரிவித்தனர். பா.ஜ.,வினரை அடுத்து முதலில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தது, தமிழக முதல்வர் விஜய்தானாம். இது கூட்டணியில் உள்ள காங்கிரசாருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., பக்கம் விஜய் போகிறாரா எனவும், அக்கட்சியினர் சந்தேகப்படுகின்றனர். சமீபத்தில் பிரதமர் மோடி சென்னை வந்த போது, அவரை விமான நிலையத்தில் வரவேற்றதுடன் அல்லாமல், 1 மணி நேரம் காத்திருந்து வழியனுப்பி வைத்தார் முதல்வர் விஜய். இதனால் மகிழ்ந்து போன பிரதமர், 'தமிழக அரசுடன் இணைந்து, முன்னேற்றத்திற்காக அனைத்து உதவிகளையும் செய்ய தயார்' என, உறுதியளித்துள்ளார்.

பா.ஜ.,வை, த.வெ.க.,வோ அல்லது முதல்வரோ அதிகமாக விமர்சிப்பதேயில்லை என்பதால், டில்லி காங்., தலைவர்களுக்கு விஜய் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

Advertisement