மரத்தில் கார் மோதி விபத்து சங்கராபுரம் அருகே வாலிபர் பலி
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் வாலிபர் இறந்தார். சிறுவன் படுகாயமடைந்தார்.
சங்கராபுரம் அடுத்த புதுப்பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் சுதாகர், 26; இவர், தனது உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் சபரிவாசன், 15; என்ற சிறுவனுடன் நேற்று (அக்.,23) பாலப்பட்டு கிராமத்தில் உள்ள அவரது மாமியார் வீட்டிற்கு டாடா இண்டிகா காரில் சென்றார். காரை சுதாகர் ஓட்டினார்.
இரவு 7:00 மணியளவில் மோட்டாம்பட்டியிலிருந்து சங்கராபுரம் செல்லும் சாலையில் கூட்டுறவு பால் நிலையம் அருகே சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் வலது புறத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சுதாகர் சம்பவ இடத்திலேயே இறந்தார். காயமடைந்த சபரிவாசன், கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
மேலும்
-
நவ.,1 பேரணிக்கு இலவச விளம்பரம்; பாஜவுக்கு நன்றி சொன்ன ராகுல்
-
கேரளாவில் நீதிபதியின் 17 வயது மகன் ஓட்டிய காரால் விபரீதம்; விபத்தில் முதியவர் பலி
-
டாக்ஸி டிரைவரிடம் ரூ. 2 லட்சம் மோசடி செய்தவர் பிடிபட்டார்
-
குமரகோட்டம் முருகன் கோவிலில் ரிஷி கோபுரம், மூலவர் விமானம் பாலாலயம்
-
புயல் எச்சரிக்கையால் கடலுக்கு செல்லாத மீனவர்கள் கரையோரங்களில் ஓய்வெடுக்கும் மீன்பிடி படகுகள்
-
புத்தகரம் முத்து கொளக்கியம்மன் தேர் வெள்ளோட்டம் கோலாகலம்