நவ.,1 பேரணிக்கு இலவச விளம்பரம்; பாஜவுக்கு நன்றி சொன்ன ராகுல்
புதுடில்லி: ஓட்டுத் திருட்டு நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. தேர்தல் ஆணையத்தை கண்டித்து இண்டி கூட்டணி சார்பில் நவ.,1ம் தேதி டில்லியில் பேரணி நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க பொதுமக்களுக்கு லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் அழைப்பு விடுத்துள்ளார்.
அவரது எக்ஸ்தளப்பதிவு; நமது ஓட்டுகள் திருடப்படுவதை எந்த சூழலிலும் சகித்துக் கொள்ள முடியாது. வாக்காளர் பட்டியலில் சட்ட விதிகளை மீறி பெயர்கள் நீக்கப்படுகின்றன. இதை எதிர்த்து கேள்வி கேட்டால் தடியடி நடத்துகிறார்கள். நமது ஓட்டுகளையும், நாட்டையும் பாதுகாக்க நவ.,1ம் தேதி டில்லியில் பிரமாண்ட பேரணி நடத்தப்பட இருக்கிறது.
மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், வர்த்தகர்கள், பெண்கள், இளைஞர்கள் என ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் இதில் பங்கேற்கலாம். ஓட்டு உங்களுடையது.போராட வேண்டியதும் நீங்கள்தான்.
இண்டி கூட்டணியின் இந்தப் பேரணியை மக்களிடம் கொண்டு சென்ற பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சியினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடிவேலு போல கிணறு காணவில்லை புகார். ஓட்டு திருட்டு என்றால் போலீசிடம் புகார் செய்க. சட்ட விதிகள் மீறி வாக்காளர் பெயர் நீக்கி இருந்தால் நீதிமன்றம் செல்க. இரண்டு குறையை எப்படி நிவர்த்தி செய்வது என்ற வழியை மக்களுக்கு சொல்க. நவம்பர் 1 ல் பேரணி, ஊரணி எதற்கு ராகுல். மக்களை, வியாபாரிகளை இம்சிக்க தானே ராகுல். வெளிநாட்டு நிதி நிரம்பி வழிகிறது. பணம் கொடுத்தால் கூலி படையை எப்போதும் யார் வேண்டுமானாலும் சேர்க்க முடியும்.மேலும்
-
மீனாட்சி அம்மன் பார்த்து கொள்வார் மின்வெட்டு பற்றி பழனிசாமி ஆவேசம்
-
மினி பஸ்சில் பெண்ணை சீண்டிய கொத்தனார் கைது
-
உத்தரகண்டில் ஹெலிகாப்டர் விபத்து பைலட் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்
-
அமெரிக்கா உளவு பார்த்ததாக சீன பெண் மீது குற்றச்சாட்டு
-
போர், ஆயுத ஏற்றுமதிக்கு எதிர்ப்பு 22 நாடுகளில் வேலை நிறுத்தம்
-
பூடானில் பனிப்பாறை ஏரி உடைந்து வெள்ளம் அசாம், மேற்கு வங்கத்துக்கு எச்சரிக்கை