தமிழகத்தில் அழிந்து கொண்டிருக்கும் அதிமுக, திமுக; அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
சிவகங்கையில் அமைச்சர் நிர்மல் குமார் அளித்த பேட்டி; இடைத் தேர்தலில் ஆளுங்கட்சி எந்தவித பணமும் செலவழிக்காமல், 4 மாத நல்லாட்சி, தமிழக முதல்வர் விஜய்யின் செல்வாக்கை மட்டுமே வைத்து எதிர்கொள்ளப்பட்டது. இரண்டு தொகுதியுமே எந்த காலத்திலும் அதிமுகவின் கோட்டையாக இருந்து வந்தது. இரண்டு மடங்கு, மூன்று மடங்கு அதிக வாக்குகளை பெற்று எங்களது வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
முதல்வரின் செல்வாக்கு எல்லா இடங்களிலும் கூடி இருப்பதை பார்க்கிறோம். தமிழகத்தில் திமுகவும், அதிமுகவும் அழிந்து கொண்டிருப்பதை நாம் பார்க்க முடிகிறது. இதனை அதிமுகவும், திமுகவும் அவர்களாக தேடி கொண்டது. தமிழக முதல்வருக்கு எதிராக அதிமுகவும், திமுகவும் என்றைக்கு சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்தார்களோ, அன்றைக்கே இரண்டு பேரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட முடிவு. அடுத்து வரும் தேர்தலில் அதிமுக, திமுக, பாஜ ஆகிய மூன்று பேரும் சேர்ந்து தான் தமிழக முதல்வருக்கு எதிராக அணி திரள்வார்கள்; அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
தமிழக மக்கள் யார் கையில், நமது எதிர்காலம் இருக்கிறது என்பதை தெளிவாக புரிந்து கொண்டனர். அதிமுக, திமுக செய்த தவறால், தவிர்க்க முடியாமல் வந்ததுதான் இந்த இடைத் தேர்தல்கள். இன்னும் மேலும் பல தவறுகள் செய்து கொண்டிருந்தால் நிறைய இடைத்தேர்தல்கள் வரும்; இபிஎஸ் அதிமுகவில் இருக்கிறாரா?
வேறு யாராவது அதிமுகவில் இருக்கிறார்களா? என்பதை முதலில் இபிஎஸ் தெரிந்து கொள்ள வேண்டும். அவர் எந்த அதிமுகவில் இருக்கிறார் என்று தெரிந்து கொள்ள வேண்டும். சுயநலவாதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து அதிமுக என்ற ஒன்று இல்லாமல் செய்து விட்டார்கள்.
ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் தினமும் மாலை 3, 4 மணிக்கு டீ டைமில் டைம் பாஸ் செய்வதற்காக பிரஸ்மீட் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். எல்லோரும் சேர்ந்து தினகரனை பொதுச்செயலாளர் ஆக்கப் போகிறார்களா? இவ்வாறு நிர்மல் குமார் கூறினார்.
அய்யா சாமி உங்களுக்கு கிடைத்திருக்கும் 5 வருட சந்தர்ப்பத்தில் தமிழக மக்களுக்கு எதாவது நல்லது செய்ய முடியுமா பாருங்க. அழிந்து கொண்டிருக்கும் கட்சிகளை பற்றி உங்களுக்கென்ன கவலை. அழிந்து கொண்டிருக்கும் கட்சிகளுக்காக ஒப்பாரி வைக்கிற மாதிரி இருக்கு.
திராவிட ஒழிப்பு தொகுப்பு ஒன்றைக்கூட புரிந்து கொள்ள ஆள் இல்லை என்று நினைத்த தருணத்தில் இது போன்ற மேதை ஒருவரின் பேட்டி இனிக்கிறது. திராவிடம் என்பது முழுவதுமாக அழிந்து போகவேண்டிய வெள்ளைக்காரன் ஒருவன் பிரிவினை வாதத்தை முன்னிறுத்தி, கொளுத்திப்போட்டுப்போன மூட நம்பிக்கை.
நிர்மல் குமார் அவர்களே இதெல்லாம் தேவையில்லாத வேலை தாங்கள் கட்சிக்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? மக்களுக்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் மக்களுக்கு என்ன செய்யலாம் என்பதை அறிவார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்துங்கள் தேவை இல்லாமல் அடுத்த காட்சிகளை பற்றி குறை கூறியது தெரிந்து கொள்ளுங்கள் ஆறு மாதம் ஆகிவிட்டது இன்னும் இருக்கும் நான்கரை வருடங்களில் நீங்கள் செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கிறது அதை நோக்கி பயணத்தை எடுத்து வையுங்கள் தேவையில்லாமல் உளறிக்கொண்டு தேவையில்லாமல் ஆதார் அர்ஜுன உலகைக்கொண்டு கட்சியின் பெயரைக் கெடுத்துக்கொண்டு அழிந்து விடாதீர்கள் நாம் தமிழர் கட்சி மாதிரி இதெல்லாம் கேட்டு கேட்டு குளித்து விட்டது அடுத்த வேலை என்ன செய்ய வேண்டும் என்பதை ஆக்கபூர்வமான விஷயங்களில் கவனத்தை செலுத்துங்கள் கட்சி இணை அமைச்சர்களையும் ஆக்கப்பூர்வமாக செயல்பட என குழுக்களை அமையுங்கள் மழை பெய்து கொண்டிருக்கிறது அதற்கான ஆகப்பூர்வமான விஷயங்கள் என்ன கவனம் செலுத்த வேண்டும் அதை செலுத்துங்கள் மற்றும் இன்னும் துறைகளில் இருக்கும் அமைச்சர்களிடம் அவர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று கேளுங்கள் அதை விடுத்து அதிமுகவும் திமுகவும் எங்கள் குறை சொல்லிக் கொண்டே இருந்தால் மக்கள் உங்கள் மீது ஒரு வெறுப்பு உண்டாகிவிடும் தயவு செய்து நிறுத்திக் கொள்ளுங்கள் இதோடு
உங்கள் கட்சி வேலையை மட்டும் பாருங்கள். அழிவை நோக்கி நகர்கிறது. வெட்டி பேச்செல்லாம் வேண்டாம். நிதிநிலை மோசமாகி வருகிறது.வீண் இலவசங்கள் ஊரை ஏமாற்றும்.இவற்றை கவனியுங்கள்.
எல்லாம் மாயை அமீச்சரே.
ஆதவ் மற்றும் நிர்மல் இவர்களுக்கு இருக்கும் வாய்க்கு பலிகடா ஆக போவது நடிகன் கட்சி.. இதுதான் நிதர்சனம்..
கொக்கரிக்க வேண்டாம் அமைச்சரே விதி மக்களின் விரலில் ஏன் 2031 இல் கூட மாறுவதற்கு சாத்தியம் உண்டு மக்கள் நினைத்தால்.
ஐயா அமைச்சரே நீங்கள் இடைத்தேர்தலில் இரண்டு மடங்கு மூன்று மடங்கு ஒட்டு வாங்கிவிடீர்களா ? இதை சிறப்பாக பொய் சொல்ல யாராலும் முடியாது, ஐயா நீங்கள் மறுபடி போயி, ஒட்டு எண்ணிக்கையை சரிபாருங்கள், யாரையும் நம்ப வேண்டாம், நீங்களே பார்க்கலாம், ஒரு தொகுதியில் 10000 இன்னொன்றில் 20000 கூடுதல், எதோ தப்பி பிழைத்தீர்கள். அதுவும், முருங்கைக்காய் பறித்து, டி சாப்பிட்டு, டிராக்டர் ஒட்டி மற்றும் ரோடு ஷோ பண்ணியதால். இல்லையெனில் அம்போதான். போயி மின் துறையை சரி பண்ண பாருங்கள், உற்பத்தியை அதிகரித்து, பவர் கட் இல்லாமல், முக்கியமாக 35ரூபாய்க்கு யூனிட் கரண்ட் வாங்கி உங்களுக்கு நீங்களே ஆப்பு வைக்காதீர்கள். இன்னும் தவறுகள்தான் நடக்கின்றன.
இவரும் அந்த நெடிய அமைச்சரும் எப்பொழுதும் இப்படியே தான் பேசிக் கொண்டே
இருப்பாங்க போல அப்படீங்கறாங்க.
அது தான் எக்கச்சக்க அரசியல் பேசியாச்சே? நிறுத்தவே மாட்டீங்களாக்கும்.விஜயை தவிர்த்துப் பார்த்தால் மற்றவர்களது மூஞ்சியை எல்லாம் இங்கு யார் பார்த்திருக்கிறார்கள்?
எனவே உங்கள் தகுதியை அவ்வப்போது
நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஓவராக வாய் விட வேண்டாம்.
இன்னொன்று. நீங்கள் சொல்லி தான் திராவிடாசைப் பற்றி மக்களுக்கு தெரிய வேண்டுமா?
அனுபவ வறட்சியை நீங்களே வெளிச்சம் போட்டு காட்டிக்கொள்ள வேண்டாம்.மேலும்
-
லேசான மழைக்கே தத்தளித்த விழுப்புரம் நகராட்சி பகுதி
-
பச்சையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
-
ரிஷிவந்தியம் பகுதியில் 168 மி.மீ., மழை பதிவு
-
பஜார் பகுதியில் நாற்று நடும்போராட்டம் நடத்த முடிவு
-
குன்றத்து கோயில்களில் அன்னாபிஷேகம்: சிவபெருமானுக்கு அன்ன அலங்காரம்
-
மின்வாரிய அதிகாரிகள் அலட்சியத்தால் கருகிய எலக்ட்ரிக், விவசாய பொருட்கள்