லேசான மழைக்கே தத்தளித்த விழுப்புரம் நகராட்சி பகுதி

விழுப்புரம்: லேசான மழைக்கே விழுப்புரம் நகரில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

வடகிழக்கு பருவமழையால் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்று (அக்.,24) இரவு துவங்கிய மழை இன்று (அக்.,25) பகலிலும் தொடர்ந்து பெய்தது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

இந்த தொடர் மழையால் விழுப்புரம் நகரில் தீயணைப்பு நிலையம் எதிரில், சிந்தாமணி தெரு, நகராட்சி மைதானம் அருகில் இருந்து ரயில் நிலையம் செல்லும் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் சாலையில் தேங்கியது.

இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் குடியிருப்பு மக்கள் கடும் அவதியடைந்தனர். லேசான மழைக்கே நகரில் மழைநீர் பல இடங்களில் தேங்கி தத்தளித்தது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, புயலால் வரும் பெரும் வெள்ளங்களில் மழைநீர் நகரில் தேங்காத வகையில் கால்வாய் அடைப்புகளை அகற்ற கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement