சிங்கம்புணரி பாலாற்றில் தண்ணீர் விவசாயிகள் மகிழ்ச்சி
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பாலாற்றில் தண்ணீர் வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கரந்தமலை பகுதியில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு உற்பத்தியாகும் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. வெள்ள நீர் இன்று (அக்.,24) சிவகங்கை மாவட்ட எல்லையை அடைந்தது. அங்கிருந்து சிங்கம்புணரி வழியாக பாயும் போது ஆற்றின் இருபுறமும் கால்வாய்கள் மூலம் பாசனக்கண்மாய்களுக்கு பாலாற்று தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
உப்பாறும் பாலாறும் அதன் பாசன கண்மாய்களும் தொடர்ச்சியாக வறண்டு கிடந்த நிலையில் ஆற்றில் தண்ணீர் வந்தது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரம் அணைக்கரைப்பட்டி, சிவபுரிபட்டி, சிங்கம்புணரி, காளாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பாலாற்றில் சீமைக் கருவேல மரங்களை அகற்றாததால் தண்ணீர் கடைமடைக்கு செல்வது தாமதம் ஆக வாய்ப்புள்ளது. இது விவசாயிகளுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.
மேலும்
-
'மண்புழு உரம் விற்பனையில் ஓராண்டு லாபம் ரூ.16 லட்சம்!'
-
ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டம் வெற்றி பெறுமா?
-
இரண்டு மாத குழந்தை வயிற்றில் வளரும் கரு
-
மழைநீர் வெளியேற்ற எம்.எல்.ஏ., நடவடிக்கை
-
இறப்பு விபர மருத்துவ சான்றிதழ்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்க கோரிக்கை
-
நத்தம் ரோட்டில் அதிகரிக்கும் டூவீலர் விபத்து உயிரிழப்புக்கள்: எஸ்.பி., நடவடிக்கை அவசியம்