இரண்டு மாத குழந்தை வயிற்றில் வளரும் கரு
ராய்ச்சூர் : கர்நாடகாவில் இரண்டு மாத ஆண் குழந்தையின் வயிற்றில், கரு இருப்பது கண்டுபிடிக்கப்பட் டது.
கர்நாடக மாநிலம், கதக் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியின், இரண்டு மாத ஆண் குழந்தையின் வயிறு திடீரென வீங்கியது; அவ்வப்போது வாந்தி எடுத்தது.
சிகிச்சைக்காக, சில நாட்களுக்கு முன், ராய்ச்சூர் மாவட்டம், சிந்தனுாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்குள்ள டாக்டர்கள் குழந்தையை பரிசோதித்தபோது, குழந்தையின் வயிற்றில் கட்டி போன்ற ஒன்று இருப்பது தெரியவந்தது. அதன்பின் நடத்தப்பட்ட பரிசோதனைகளில், குழந்தையின் வயிற்றில் இருப்பது கட்டியல்ல; கரு என்பது தெரிந்தது.
இதுகுறித்து, குழந்தைக்கு சிகிச்சையளித்த டாக்டர் சிவராஜ் கூறியதாவது: கர்ப்பிணியின் வயிற்றில் உருவாகும் இரட்டை கருவில் ஒன்று மட்டும் நன்றாக வளர்ச்சி அடையும். மற்றொரு கரு வளராமல், வளர்ந்த கருவின் உடலுக்குள் சிக்கி கொள்ளும். இதுவே, 'பீடஸ் இன் பீடு' என, அழைக்கப்படுகிறது. 50 லட்சம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இதுபோன்ற அபூர்வமான சூழ்நிலை ஏற்படும்.
நம் நாட்டில், 230 குழந்தைகளுக்கு மட்டும், இது போன்று நிகழ்ந்து உள்ளது. கர்நாடகாவில் இது மூன்றாவது முறையாகும். குழந்தைக்கு அவசர சிகிச்சை, கூடுதல் பரிசோதனைகள் தேவைப்படுவதால், பல்லாரியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளோம். ரத்தப் பரிசோதனை உட்பட மற்ற பரிசோதனைகள் செய்த பின்னரே, அறுவை சிகிச்சை தேவையா என்பது குறித்து, முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
பிற்படுத்தப்பட்டோர் தனிநபர் கடன் திட்டம் (Tag) சிறு தொழில் தொடங்க 25 லட்சம் ரூபாய் வரை கடன்
-
முளைக்குமா வயலில் தண்ணீர் தேங்குவதால் விதை நெல் இளையான்குடியில் மழையால் விவசாயிகள் கவலை
-
தற்காலிக சீரமைப்பு பணி வீண் சேதமடையும் சாலைகளில் அவதி
-
சேதமடைந்த பாசன கால்வாய் சீரமைத்தால் விவசாயிகள் பயன்
-
பருவமழையால் இதுவரை 14 பலி…. மழை பாதிப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டைன் தகவல்
-
ஆஸ்திரேலிய விசா: இந்தியர்களுக்கு பயோமெட்ரிக் பதிவு கட்டாயம்!