இறப்பு விபர மருத்துவ சான்றிதழ்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்க கோரிக்கை

திண்டுக்கல்: ‘ஏழை எளிய மக்கள் உயிரிழந்ததற்கான விபரம் அறியக்கூடிய மருத்துவ அலுவலர்களால்வழங்கப்படும், இறப்பு விபர மருத்துவ சான்றிதழை’ (படிவம் 4ஏ) லஞ்சமின்றி ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்க கலெக்டர்நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என, கோரிக்கை எழுந்துள்ளது.

சாணார்பட்டியில் 45 நாட்களுக்கு முன் 92 வயது மூதாட்டி வயது முதிர்வுகாரணமாக உயிரிழந்தார். இவர் இறப்பிற்கான படிவம் 4ஏ’ (மரணத்திற்கானவிபரங்கள் அடங்கியமருத்துவ சான்றிதழ்) இன்றி மின் மயானத்தில் எரியூட்டமுடியாது என்பதால், சாணார்பட்டி தனியார் மருத்துவமனையில்இறந்த மூதாட்டியின் உறவினர்கள் முறையிட்ட போது, சான்றிதழ் வழங்க அந்த தனியார் மருத்துவமனை நிர்வாகம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர்.

கொசவப் பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலராகஉள்ள டாக்டர் பணியில் இல்லாததால், திண்டுக்கல் அரசுமருத்துவமனைக்கு வந்து மருத்துவ சான்றிதழை மிகுந்த சிரமங்களுக்கு இடையில் உறவினர்கள் பெற்றுள்ளனர்.அதன்பின் திண்டுக்கல் ஆர்.எம்.,காலனி மின் மயானத்தில் அச்சான்றிதழை வழங்கி மூதாட்டியின்உடல் எரியூட்டப்பட்டு உள்ளது.

சாணார்பட்டி விவசாயி ராஜேந்திரன்கூறியதாவது: வயது முதிர்வால் உயிரிழப்புக்கள் ஏற்படும் போது, உடலை எரியூட்ட படிவம் 4ஏ’ வழங்குவது அவசியம்.

அதனை கலெக்டர் ஆரம்ப சுகாதாரநிலைய மருத்துவ அலுவலர்கள் மூலம் வழங்க உத்தரவிட்டால், ஏழை எளிய மக்கள் பயனடைவர்., என்றார்.

Advertisement