வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்பால் மழைநீர் சூழ்ந்து நெற்பயிர்கள் சேதம்
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு பகுதியில் வடிகால் வாய்க்கால்கள் ஆக்கரமிப்பால், மழை நீர் வடிய வழியின்றி வயல்களில் சூழ்ந்துள்ளதால் நெற்பயிர்கள் சேதம் அடையும் நிலையில் உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சேத்தியாத்தோப்பு மேற்கு பகுதியில் கோபாலபுரம், சு.கீனனுார், கம்மாபுரம், சிறுவரப்பூர், சி.சாத்தப்பாடி, ஊ.ஆதனுார், தர்மநல்லுார், வளையமாதேவி, எறும்பூர், நெல்லிக்கொல்லை, பின்னலுார் வழியாக வெள்ளாறுராஜன் வாய்க்காலில் வடியும் மழைநீர் வடிகால் வாய்க்கால் முழுவதும் ஆக்கிரமிப்பால் சுருங்கியும் மண்துார்ந்துள்ளது.
இதனால், லேசான மழை பெய்தாலே வயல்களிலிருந்து வெளியேற வேண்டிய மழை உபரி நீர் வாய்க்காலில் வடிந்து செல்ல முடியாமல் வயல்களில் சூழ்ந்து நெற்பயிர்கள் சேதமடைந்து வருகிறது.தர்மநல்லுார், வளையமாதேவி ஆகிய பகுதிகளில் சம்பா இயந்திர நடவு செய்துள்ள வயல்களில் சுமார் 50 ஏக்கருக்கு மேல் தண்ணீர் சூழ்ந்து நெற்பயிர்கள் அழுகி வருகின்றனர்.அதிக அகலம் கொண்ட வடிகால் வாய்க்கால் அங்குள்ள நிலத்திற்கு சொந்தமானவர்கள் சிறிது சிறிதாக ஆக்கிரமித்து தற்போது 5 மீட்டருக்கும் குறைவாக சுருங்கியுள்ளது.விருத்தாசலம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த வடிகால் வாய்க்காலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் வடகிழக்கு பருவ மழை துவங்கும் முன்பாக ஒவ்வொரு ஆண்டும் பெயரளவில் துார்வாரி கணக்கு காட்டி வருகின்றனர்.முற்றிலுமாக வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றி துார்வாரமல் பெயரளவில் ஒவ்வொரு அவ்வப்போது துார்வாருவதால் விவசாயிகளுக்கு போதியபலனின்றி மழை காலங்களில் தண்ணீர் சூழ்ந்து பயிர்கள் சேதமடைந்து வருகிறது.எனவே சம்மந்தப்பட்ட பொதுப்பணித்துறை உயரதிகாரிகள் நேரடி ஆய்வு செய்து வடிகால் வாய்க்காலை போர்க்கால அடிப்படையில் துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
சவுதியில் தொடரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்; நவம்பர் 7 வரை ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை ரத்து
-
புயல் வருது… கனமழை கொட்டுது... 9 துறைமுகங்களில் 1ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
-
நெரூர் காசி விஸ்வநாதர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
-
27ல் பென்சனர் குறைதீர் கூட்டம்
-
பணம், தங்க நகை திருடிய மூவர் கைது
-
பாதுகாப்பு நடவடிக்கையை கடைப்பிடிக்காத பட்டாசு கடைகள் மீது நடவடிக்கை பாயும்