நேருஜி சாலையில் ஆக்கிரமிப்பு போக்குவரத்து பாதிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் நேருஜி சாலையில் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

விழுப்புரம் நேருஜி சாலையில், சிக்னல் சந்திப்பில் இருந்து, பழைய பஸ் நிலையம் வரை பல இடங்களில், சாலையோர ஆக்கிரமிப்பால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

குறிப்பாக, மார்க்கெட் கமிட்டி அருகே உள்ள கடைகளுக்கு முன்பு, கடைக்காரர்கள், தங்களது விற்பனை உபகரணங்களை குவித்து வைத்து, இரு சக்கரை வாகனங்களை நிறுத்தி வைத்திருப்பதால், ஏற்கனவே குறுகிய அளவுள்ள அந்த சாலையில், வாகன ஓட்டிகள் நெரிசலில் அவதிப்பட்டு செல்கின்றனர். அங்கு, பாதசாரிகள் நடப்பதற்கு இடமின்றி, சாலையில் ஆபத்தாக செல்ல வேண்டியுள்ளது.

சாலையோரம், போலீசார் வைத்துள்ள சி.சி.டி.வி., கேமரா கண்காணிப்பை மறைக்கும் விதத்தில், சாலையோரமாக சிலர் பொருள்களை குவித்து ஆக்கிரமித்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement