போதை கடத்தல் கும்பலுக்கு மரண அடி; மத்திய அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்

17

நமது நிருபர்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள அறிக்கை: ஆபரேஷன் டிரைடென்ட் நடவடிக்கை மூலம் போதைப்பொருள்களுக்கு எதிராக பாஜ அரசு மற்றொரு மரண அடியை கொடுத்துள்ளது. அசாம், மிசோரம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் உள்ள 38 இடங்களில் நடத்திய சோதனையில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த 18 பேர் கைது செய்யப்பட்டனர்.

ரூ.100 கோடி ஹவாலா பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டன, 1,424 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன, ரூ.17.82 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன, 500 டெட்டனேட்டர்கள், ரூ.12 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. 2029ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்குள் இந்தியாவை போதைப்பொருள் இல்லாத நாடாக மாற்றுவதற்கான மத்திய அரசின் உறுதியை இந்த நடவடிக்கை பறைசாற்றுகிறது

போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் சவப்பெட்டியில் கடைசி ஆணி அடிக்கப்படும் வரை இந்தியா தொடர்ந்து போராடும். மத்திய முகமைகள் மற்றும் மூன்று மாநிலங்களின் போலீசார் மற்றும் போதைப்பொருள் தடுப்புக் குழுவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள். இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.

Advertisement