அரிசி விலை உயர்வால் சாகுபடி செய்த நெல்லை பயன்படுத்தும் விவசாயிகள்
கடலாடி: தற்போது அரிசி விலை கிலோவிற்கு ரூ.80 முதல் 90 வரை விலையேற்றம் செய்யப்படுவதால் விவசாயிகள் சொந்த உபயோகத்திற்கு அரிசியாக பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் விவசாயிகள் தங்களுடைய விளை நிலத்தில் அறுவடை முடிந்த பிறகு நெல்மணிகளை மொத்தமாக வியாபாரிகளுக்கு விற்பனை செய்கின்றனர். அவற்றை கொண்டு செல்லும் வியாபாரிகள் மதுரை, காரைக்குடி, பரமக்குடி, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரிசி ஆலைகளுக்கு மொத்தமாக வாங்கி செல்கின்றனர்.
இந்நிலையில் நெல் விலை உயரவில்லை. சாகுபடி செய்தாலும் அதே விலையில் தான் விலை நிலவரம் உள்ளது. ஆனால் அரிசி விலை மட்டும் உயர்ந்துள்ளது. அரிசி மூடைகளை அதிகம் பதுக்குவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். செயற்கையான முறையில் தட்டுப்பாட்டை நிலவ செய்கின்றனர்.
இந்நிலையில் பெருவாரியான விவசாயிகள் தங்களது சொந்த விளைநிலத்தில் கிடைத்த நெல்மணிகளை கொண்டு அவற்றை அரைத்து அரிசியாக்கி சமையலுக்கு பயன்படுத்தும் போக்கு நிலவுகிறது என்றனர்.
மேலும்
-
பிற்படுத்தப்பட்டோர் தனிநபர் கடன் திட்டம் (Tag) சிறு தொழில் தொடங்க 25 லட்சம் ரூபாய் வரை கடன்
-
முளைக்குமா வயலில் தண்ணீர் தேங்குவதால் விதை நெல் இளையான்குடியில் மழையால் விவசாயிகள் கவலை
-
தற்காலிக சீரமைப்பு பணி வீண் சேதமடையும் சாலைகளில் அவதி
-
சேதமடைந்த பாசன கால்வாய் சீரமைத்தால் விவசாயிகள் பயன்
-
பருவமழையால் இதுவரை 14 பலி…. மழை பாதிப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டைன் தகவல்
-
ஆஸ்திரேலிய விசா: இந்தியர்களுக்கு பயோமெட்ரிக் பதிவு கட்டாயம்!