முன்னாள் தலைமை செயலர் சுகவனேஸ்வர் காலமானார்; முதல்வர் விஜய் இரங்கல்

சென்னை: தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் சுகவனேஸ்வர் மறைவுக்கு, முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை; தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் சுகவனேஸ்வர், மறைந்த செய்தியறிந்து மிகுந்த துயரம் அடைந்தேன்.

இவர் 1967ம் ஆண்டில் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார். திருநெல்வேலியில் உதவி ஆட்சியராகப் பணியைத் தொடங்கி, நீலகிரி மாவட்ட கலெக்டர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், வருவாய் நிருவாக முதன்மை ஆணையர், சிட்கோ தலைவர் மற்றும் தலைமைச் செயலாளர் என பல்வேறு பொறுப்புகளை வகித்து திறம்படப் பணியாற்றியவர் ஆவார்.

அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Advertisement