ஆக்கிரமிப்பு கடைக்காரர்கள் 300 பேருக்கு ‘நோட்டீஸ்’

சூளகிரி: சூளகிரி பகுதியில் ஆக்கிரமிப்பு கடைக்காரர்களுக்கு, நெடுஞ்சாலைத்துறை ‘நோட்டீஸ்’ வழங்கி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி நகருக்கு, ஓசூர் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து செல்லும் மாநில நெடுஞ்சாலை செல்கிறது. இச்சாலை மற்றும் சூளகிரி ரவுண்டானாவிலிருந்து பேரிகை செல்லும் மாநில நெடுஞ்சாலையோரங்களில் ஆக்கிரமிப்பு செய்து, 300க்கும் மேற்பட்ட கடைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், அப்பகுதியிலுள்ள கடைகள், விடுதிகள், வணிக நிறுவனங்கள், சாலையோர நெடுஞ்சாலைத்துறை நிலத்தை ஆக்கிரமித்துள்ளன. அதனால், சூளகிரி நகரில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற, சூளகிரி பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், சூளகிரி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கவிதா உத்தரவின்படி, சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளுக்கு நேற்று நோட்டீஸ் வழங்கப்பட்டன. நோட்டீஸ் பெற்ற சில நாட்களில் சாலையோர ஆக்கிரமிப்புகளை தாங்களாக அகற்றி கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் வரும், 28ம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றும், அதற்கான தொகை, சம்பந்தப்பட்ட கடை உரிமையாளரிடம் வசூலிக்கப்படும் எனவும், நெடுஞ்சாலைத்துறை அந்த நோட்டீசில் தெரிவித்துள்ளது.

Advertisement