டூயூசனுக்கு சென்ற மாணவர் மாயம்
கிருஷ்ணகிரி: டூயூசனுக்கு சென்ற, 12 வயது பள்ளி மாணவர் சஞ்சய் மாயமானார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டையை சேர்ந்தவர் திருநாவுக்கரசு, 41. இவரது மகன் சஞ்சய்; 7ம் வகுப்பு படித்தார். நேற்று (அக்.,23) மாலை, டியூசனுக்கு செல்வதாக கூறி சென்றவர் மாயமானார். சிங்காரப்பேட்டை போலீசார் விசாரித்தனர்.
அதில், சஞ்சய் அப்பகுதியில் நடந்து செல்வதும், அவ்வழியே டூ – வீலரில் சென்றவரிடம், லிப்ட் கேட்டு, ஊத்தங்கரை நான்கு ரோடு பகுதிக்கு வருவதும், அப்பகுதிகளில் உள்ள ‘சி.சி.டி.வி’ கேமரா காட்சிகளில் பதிவாகி இருந்தது. போலீசார், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement