மாயமான 1 வயது பெண் குழந்தை தேடுவதில் நீடிக்கும் சிக்கல்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில், மாயமான ஒரு வயது பெண் குழந்தையைத் தேடும் பணியில், அப்பகுதியில் உள்ள ‘சி.சி.டி.வி’ கேமராக்கள் பழுதாகி இருப்பதால் கடந்த ஒரு மாதமாக பெரும் சிக்கல் நிலவி வருகிறது.
ராணிப்பேட்டையை சேர்ந்தவர் சேகர் சேகர்,46. இவரது மனைவி பிரேமா,23. இருவரும் பிளாஸ்டிக் சேகரித்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்களின் ஒரு வயது பெண் குழந்தை மகேஸ்வரியுடன், சாலையோரத்தில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த செப்., 24 ம் தேதி, பெற்றோருடன் துாங்கி கொண்டிருந்த குழந்தை திடீரென மாயமானது. சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து, 6 தனிப்படைகள் அமைத்து, குழந்தை கடத்தப்பட்டதா? என்கிற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, குழந்தை கடத்தப்பட்டு ஒரு மாதத்தை கடந்தும் விசாரணையில் முன்னேற்றம் இல்லாததால் பெற்றோர் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும், அப்பகுதியில், பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராக்கள் பழுதாகியுள்ளதால், குழந்தையை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
தனிப்படை போலீசார் ஆந்திராவில் முகாமிட்டு தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சம்பவத்தன்று சித்துார் வழியாக ஆந்திரா சென்ற வாகனங்களின் பதிவெண்ணை வைத்து தேடி வருகின்றனர்.
மேலும்
-
பத்மஸ்ரீ விருது வென்ற, கின்னஸ் சாதனை படைத்த சமையல் கலை நிபுணர் தாமு காலமானார்
-
பாரா ஆசிய விளையாட்டில் வரலாற்று சாதனை; வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு
-
சவுதியில் தொடரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்; நவம்பர் 7 வரை ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை ரத்து
-
புயல் வருது… கனமழை கொட்டுது... 9 துறைமுகங்களில் 1ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
-
நெரூர் காசி விஸ்வநாதர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
-
27ல் பென்சனர் குறைதீர் கூட்டம்