தனுஷ், சிவகார்த்திகேயனை சாடிய ஆதவ் அர்ஜுனா சமூக வலைதளங்களில் கொந்தளிக்கும் ரசிகர்கள்
சென்னை: நடிகர் தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரின் பெயரை குறிப்பிடாமல், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மறைமுகமாக சாடிய நிலையில், அவர்களது ரசிகர்கள் ஆதவுக்கு எதிராக, சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
நடிகராக இருந்த விஜய், அரசியல் கட்சி தொடங்கி, 2 ஆண்டுகளிலேயே தமிழகத்தில் ஆட்சியை பிடித்துள்ளார். முதல்வர் விஜயின் வெற்றி, சில நடிகர்களிடம், அரசியல் ஆசையை துாண்டி உள்ளது. குறிப்பாக, நடிகர் தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோர், தங்களின் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிகளை, அரசியல் பொதுக்கூட்டம் போல் நடத்தி, பரபரப்புகளை கிளப்பி வருகின்றனர்.
இந்த சூழலில், சென்னை நேற்று முன்தினம் நடந்த, த.வெ.க., கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி இளைஞரணி பொதுக்கூட்டத்தில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:
வரும் 2029 லோக்சபா தேர்தலில் இந்தியாவின் வெற்றி, தமிழகத்தில் இருந்து உருவாக்கப்படும். இதை உடைக்க, புதிய புதிய நடிகர்கள் டெல்லி சென்று முகாமிட்டுள்ளனர். அதெல்லாம் நடக்காது. யார் வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும் வரட்டும்; புதிது புதிதாக யார் வந்தால் நமக்கென்ன?
தி.மு.க., சைத்தானின் பிள்ளையாக மாறிவிட்டது. புதிதாக சைத்தானின் பிள்ளைகளும் வரும். எந்த நடிகர் டில்லியில் முகாமிட்டுள்ளார். எந்த நடிகர் பொங்கலுக்கு டில்லி சென்றார். எல்லாவற்றையும், பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
நடிகர் தனுஷ், தனது நற்பணி இயக்கத்தை, அரசியல் கட்சியாக மாற்ற முயற்சிப்பதாகவும், அதற்காக அவர் டில்லியில் முகாமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதில், டில்லியில் முகாமிட்டுள்ள நடிகர் என, தனுஷை, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மறைமுகமாக சாடினார்.
கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையின்போது, அப்போதைய மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் டில்லி இல்லத்தில் நடந்த பொங்கல் விழாவில், நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்றார். அதையே, ஆதவ் குறிப்பிட்டு பேசியதாக, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் ஆதவின் பேச்சினால் கடும் கொந்தளிப்படைந்துள்ள தனுஷ், சிவகார்த்திகேயன் ரசிகர்கள், சமூகவலைதளங்களில், த.வெ.க., அரசு மற்றும் ஆதவுக்கு எதிராக, கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். கட்சி தொடங்கும் முன்பே, த.வெ.க., பயந்துவிட்டது’ என, தனுஷ் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும்
-
பத்மஸ்ரீ விருது வென்ற, கின்னஸ் சாதனை படைத்த சமையல் கலை நிபுணர் தாமு காலமானார்
-
பாரா ஆசிய விளையாட்டில் வரலாற்று சாதனை; வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு
-
சவுதியில் தொடரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்; நவம்பர் 7 வரை ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை ரத்து
-
புயல் வருது… கனமழை கொட்டுது... 9 துறைமுகங்களில் 1ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
-
நெரூர் காசி விஸ்வநாதர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
-
27ல் பென்சனர் குறைதீர் கூட்டம்