உத்திரமேரூர் ஏரியில் பழுதான மதகு சீரமைப்பு பணி தொடக்கம்
உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஏரியில் பழுதடைந்த மதகு அடைப்புகள் நீக்கி, பாசனத்திற்கு தண்ணீர் செல்ல ஏதுவாக சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், இரண்டாவது பெரிய ஏரியாக உத்திரமேரூர் ஏரி உள்ளது. நீர்வளத்துறை கட்டுப்பாட்டிலான இந்த ஏரி, 4,000 ஏக்கர் பரப்பளவில், 20 அடி ஆழம் உடையது.
பருவமழைக்கு ஏரி முழுமையாக நிரம்பினால், 18 மதகுகள் மூலம் வேடபாளையம், காக்கநல்லுார், முருக்கேரி, நீரடி, குப்பையநல்லுார், காட்டுப்பாக்கம், ஓங்கூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 5,600 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
இந்த ஏரியின் ஏழாவது மதகு பகுதி, ஓராண்டாக பழுதடைந்து இருந்தது. இதனால், பாசனத்திற்கு தண்ணீர் வெளியேற இயலாத நிலை இருந்து வருகிறது. இதனால், நடப்பாண்டின் சம்பா மற்றும் நவரை பருவத்தில், சாகுபடி பாதித்தது.
எனவே, மழைக்காலத்திற்கு முன்னதாக பழுதடைந்த மதகை சீரமைக்க, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, உத்திரமேரூர் நீர்வளத்துறை சார்பில், ஏழாவது மதகு பகுதியில் பள்ளம் தோண்டி, தண்ணீர் செல்ல ஏதுவாக அடைப்புகள் நீக்கப்பட்டு வருகிறது.
ஓரிரு நாட்களில் மதகு சீரமைப்பு பணி முழுமை பெற்று, பயன்பாட்டிற்கு வரும் என, உத்திரமேரூர் நீர்வளத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும்
-
சவுதியில் தொடரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்; நவம்பர் 7 வரை ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை ரத்து
-
புயல் வருது… கனமழை கொட்டுது... 9 துறைமுகங்களில் 1ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
-
நெரூர் காசி விஸ்வநாதர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
-
27ல் பென்சனர் குறைதீர் கூட்டம்
-
பணம், தங்க நகை திருடிய மூவர் கைது
-
பாதுகாப்பு நடவடிக்கையை கடைப்பிடிக்காத பட்டாசு கடைகள் மீது நடவடிக்கை பாயும்