பெண் இன்ஸ்பெக்டர் குடும்பத்துக்கு நிதி
திண்டுக்கல்: சிவகங்கையை சேர்ந்தவர் லலிதா 45. சிவகங்கை எஸ்.பி., அலுவலக குற்ற ஆவண காப்பகத்தில் இன்ஸ்பெக்டராக பணி செய்தார். இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். 2026 ஆக.,19ல் உடல் நலக்குறைவால் லலிதா மரணம் அடைந்தார். 2008 ஆண்டு தமிழக காவல் பணியில் இணைந்தவர்கள் ஒன்றிணைந்து அவரது குடும்பத்துக்கு உதவி செய்ய முன்வந்தனர்.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பணியாற்றி வரும் இன்ஸ்பெக்டர்கள் 750 பேர் பங்களிப்பின் பேரில் ரூ.16 லட்சத்து 77 ஆயிரத்து 500 நிதி திரட்டப்பட்டது. சக அதிகாரிகள் லலிதாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நிதியை வழங்கி ஆறுதல் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement