15.72 லட்சம் பெண்கள் பஸ்சில் இலவச பயணம்
ஈரோடு:தமிழகத்தில் நகர பஸ்கள் மட்டுமின்றி எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., - டீலக்ஸ், மாவட்டங்களுக்கு இடையேயான அரசு பஸ்களிலும் பெண்கள், திருநங்கைகள் இலவச பயண திட்டமான வெற்றி பயண திட்டம் கடந்த, 2ல் துவக்கி வைக்கப்பட்டது.
ஈரோடு மண்டல அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ், சாதாரண கட்டணத்தில், 335 புறநகர் பஸ்களில் இலவச பயணம் துவக்கி வைக்கப்பட்டது. ஏற்கனவே மண்டல அளவில், 304 நகர பஸ்களில் தினமும், 3.25 லட்சம் பெண்கள் இலவசமாக பயணித்து வந்தனர்.
இதுபற்றி, கலெக்டர் கந்தசாமி கூறியதாவது:
கடந்த, 2 முதல் நகர மற்றும் புறநகர சாதாரண கட்டண பஸ்களில் மகளிர் இலவச பயண திட்டம் வெற்றி பயணம் என்ற பெயரில் செயல்படுத்தப்படுகிறது. மகளிர் மட்டுமின்றி, திருநங்கைகளும் அனுமதிக்கப்படுகின்றனர். கடந்த, 2 முதல் 21 வரை மண்டல 15 லட்சத்து, 72,183 பெண்கள் புறநகர் பஸ்களில் பயணம் செய்துள்ளனர்.
கூலி வேலை, பள்ளி, கல்லுாரிகளுக்கு படிக்க செல்வோர், பல்வேறு வகை வேலைகளுக்கு, மருத்துவமனை போன்றவைகளுக்கு செல்லும் மகளிர் இத்திட்டம் மூலம் பயன் பெறுகின்றனர். இவ்வாறு கூறினார்.
மேலும்
-
ராணுவ ரகசியங்கள் கசிவு; முன்னாள் ராணுவ அதிகாரி கைது
-
தவெக ஆட்சி 6 மாதங்களை பூர்த்தி செய்யாது; நம்புகிறார் ஸ்டாலின்
-
உள்நாட்டு பொருட்களை வாங்குங்கள்; தீபாவளி, சத் பூஜைக்கு மக்களுக்கு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி வலியுறுத்தல்
-
அவிழ்த்து வைத்த செருப்பு ஆள்கிறதாம்; வாய்க்கொழுப்பு லியோனிக்கு வலுக்கிறது கண்டனம்
-
நீலமலையை உலுக்கி எடுத்த பெருமழை; அன்றே சொன்னது தினமலர்!
-
புழல் ஏரி உபரி நீர் கால்வாய் 7,000 கன அடி நீரை தாங்கும்…. அதிகமானால் ஆபத்து!