டேலண்ட் வித்யாலயா மாணவர்கள் தேசிய மல்யுத்த போட்டிக்கு தகுதி
அம்மாபேட்டை:மாநில அளவிலான, கிராப்லிங்க் மல்யுத்த போட்டி மேட்டூர் ஜோஹிந்திரா மல்யுத்த அகாடமியில் நடைபெற்றது.
தமிழகத்தில், 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற, அம்மாபேட்டை டேலண்ட் வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் ஜோஹிந்திரா (8ம் வகுப்பு), சித்தார்தா (8ம் வகுப்பு), இன்பா (6ம் வகுப்பு), நிவிஸ் ( 8ம் வகுப்பு) ஆகியோர் தங்கப்பதக்கமும், அகிலன் (8ம் வகுப்பு), பூமிஸ் (9ம் வகுப்பு), கோகுல கிருஷ்ணன் (5ம் வகுப்பு), நிதர்சன் (5ம் வகுப்பு), லக் ஷனா (5ம் வகுப்பு), சபர்ணா (5ம் வகுப்பு), தன்யாமோகன் ஆகியோர் வெள்ளி பதக்கமும், இன்பான்ட் பினு ( 8ம் வகுப்பு), பிரணீத் (8ம் வகுப்பு), ஸ்ரீஹரிஹரன் (8ம் வகுப்பு), சுகுமாரன் (8ம் வகுப்பு), நிஷாந்த் (5ம் வகுப்பு), தேவப்பிரியன் (6ம் வகுப்பு) ஆகியோர் வெண்கல பதக்கமும் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்கள் வரும், 30ம் தேதி டெல்லி ஹரித்துவாரில் நடைபெறும் தேசிய அளவிலான மல்யுத்த போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். வரும் 27ம் தேதி போட்டிகளில் கலந்து கொள்ள ஹரித்துவார் செல்கின்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் சரவணன், அறக்கட்டளை தலைவர் சாந்த
குமாரி சரவணன்,ஈரோடு மாவட்ட முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜா மற்றும் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் மாணவர்களை பாராட்டினர்.
மேலும்
-
தீபாவளிக்கு முன் அகவிலைப்படி உயர்த்தப்படுமா? அக்.28க்காக காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள்
-
காரைக்குடி டூ மதுரைக்கு இடைநில்லா பஸ் அவசியம் பயணிகள் வலியுறுத்தல்
-
பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
-
விவசாய நிலத்தில் நிலத்தில் மருந்து தெளித்தல், களையெடுத்தல் பணி
-
சாலையில் கிடந்த நகையை ஒப்படைத்தவருக்கு பாராட்டு
-
நிலம் கையகப்படுத்த அளவீடு பணி துரிதம்