குண்டாஸில் இருவருக்கு சிறை

ஈரோடு:மதுரை மாவட்டம், உசிலம்பட்டி சீனிவாச நகரை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன், 50. கால் டாக்சி டிரைவர். இவர் கடந்த, செப்டம்பரில் சத்தியமங்கலத்துக்கு, வாடகைக்காக காரில் வந்தார். இந்நிலையில் பவானிசாகர், தொப்பம்பாளையத்தில் செல்லும் கீழ்பவானி வாய்க்கால் பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

பவானிசாகர் போலீசார் கொலை வழக்கு பதிந்து 3 பேரை கைது செய்தனர். இதில் கைதான கோவை மாவட்டம் காரமடையை சேர்ந்த தன்ராஜை, 40, குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஈரோடு கலெக்டருக்கு, எஸ்.பி., பரிந்துரைத்தார். அதன்பேரில் தன்ராஜை குண்டாசில் கைது செய்ய கலெக்டர் கந்தசாமி உத்தரவிட்டார்.

இதே போல் பழையபாளையத்தை சேர்ந்த மகேஷ் குமார், 35, கஞ்சா வழக்கில் கோபி மதுவிலக்கு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என்ற,

மதுவிலக்கு போலீசாரின் பரிந்துரையை ஏற்று, குண்டாசில் மகேஷ்குமாரை அடைக்க கலெக்டர்

உத்தரவிட்டார்.

Advertisement