கனமழைக்கு 16 வீடுகள் சேதம் மரங்கள் முறிந்து மண்சரிவு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தொடர் மழை பெய்தது. கனமழைக்கு 14 வீடுகள் பகுதியாகவும் 4 வீடுகள் முழுவதும் இடிந்து சேதமடைந்தன.
வடகிழக்கு பருவமழைக்காலம் துவங்கிய நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் வங்கக்கடலில் புதிய புயல் உருவாகி உள்ளது. இதனால் திண்டுக்கல், தேனி உள்பட சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
திண்டுக்கல்லில் தொடர்ந்து இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்த கனமழைக்கு 14 வீடுகள் பகுதியாக இடிந்து சேதமடைந்தன. 4 வீடுகள் முழுவதும் இடிந்தன. பகலில் துவங்கிய கனமழை விட்டு, விட்டு இரவு வரை தொடர்ந்தது.
இதனால் நகரில் ஜி.டி.என்.சாலை, ஏ.எம்.சி.ரோடு, பஸ் ஸ்டாண்ட், மாநகராட்சி ரோடு, தமிழ் சாலை, மெங்கில்ஸ் ரோடு, நாகல் நகர், ஆர்.எம்.காலனி ரவுண்டானா உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தெப்பமாய் தேங்கியது.
மாவட்டத்தின் பிற பகுதிகளான வேடசந்துார், வடமதுரை, பழநி, கொடைக்கானல், ஆத்துார், கன்னிவாடி, நிலக்கோட்டை, நத்தம் உள்ளிட்ட இடங்களிலும் அதன் சுற்றுப்புற கிராமங்களிலும் கனமழை பெய்தது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக நத்தம் தாலுகாவில் 108.50 மி.மீ.மழை பதிவானது. இதுபோல் திண்டுக்கல் 12.20 மி.மீ., காமாட்சிபுரம் 20.90 மி.மீ., நிலக்கோட்டை 1.20 மி.மீ., சத்திரப்பட்டி 37.60 மி.மீ., வேடசந்துார் தாலுகா, புகையிலை ஆராய்ச்சி மையம் தலா 81 மி.மீ., பழநி 66.60 மி.மீ., கொடைக்கானல் ரோஸ் கார்டன் 18 மி.மீ., பிரையன்ட் பூங்கா 66.40 மி.மீ., அளவில் மழை பதிவாகியது.
மலைபாங்கான பழநி, நத்தம், கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் மரங்கள் முறிந்து, மண்சரிவு ஏற்பட்டது.
பழநி: பழநி அருகே புளியம்பட்டியில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. அங்குள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. இதில் 4 வீடுகள் இடிந்து விழுந்ததில் மக்கள் அவதிப்பட்டனர். நடமாடும் மருத்துவ குழுவினர் முகாமிட்டுள்ளனர். தண்ணீரை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். நேற்று கலெக்டர் துர்கா அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக தங்க வைக்கவும் தேவையான உதவிகளை வழங்கவும் உத்தரவிட்டார்.
மேலும்
-
பத்மஸ்ரீ விருது வென்ற, கின்னஸ் சாதனை படைத்த சமையல் கலை நிபுணர் தாமு காலமானார்
-
பாரா ஆசிய விளையாட்டில் வரலாற்று சாதனை; வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு
-
சவுதியில் தொடரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்; நவம்பர் 7 வரை ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை ரத்து
-
புயல் வருது… கனமழை கொட்டுது... 9 துறைமுகங்களில் 1ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
-
நெரூர் காசி விஸ்வநாதர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
-
27ல் பென்சனர் குறைதீர் கூட்டம்