கரையை கடந்தது அர்னாப் புயல்; இந்திய வானிலை மையம் தகவல்
-நமது சிறப்பு நிருபர்-
அர்னாப் புயல் அதிதீவிரப் புயலிலிருந்து தீவிரப் புயலாக வலுவிழந்தது. ஆந்திரா, ஏனாம் கடலோரப் பகுதிகளில் இன்று (அக்டோபர் 28) காலை 8:30 மணிக்கு கரையைக் கடந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள 'அர்னாப்' புயல், மிகத் தீவிரப் புயலாக வலுப்பெற்று ஆந்திர கடலோரப் பகுதியை நோக்கி அதிவேகமாக நகர்ந்து வருகிறது. நள்ளிரவு 12.30 மணியளவில் புயலின் மைய பகுதி கரையை கடக்க துவங்கியது. அதிகாலை 4 மணியளவில் முழுவதுமாக மைய பகுதி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

பிறகு, வடமேற்கு திசையில் நகர்ந்து, பபத்லா, - விசாகப்பட்டினம் இடையே ஏனாம் அருகே காலை 8:30 மணிக்கு கரையைக் கடந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது; புயல் கரையை கடந்த போது, மணிக்கு 125 முதல் 135 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஆந்திராவில் மணிக்கு 115 முதல் 125 கி.மீ வேகத்திலும், இடையிடையே 140 கி.மீ வேகத்திலும் பலத்த சூறாவளிக் காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. மோசமான வானிலை காரணமாக விசாகப்பட்டினம் மற்றும் விஜயவாடா இடையேயான விமான சேவை, ரயில் சேவை பாதிக்கப்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
புயல் நிலவரம் குறித்து சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் வதந்திகளையோ, உண்மைக்கு மாறான கணிப்புகளையோ வெளியிடக் கூடாது என ஒடிசா அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடலோர மாவட்டங்களில் பேரிடர் மீட்புப் படையினர் முழு வீச்சில் களமிறக்கப்பட்டு, நிலைமை தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
வாசகர் கருத்து (2)
Vasan - ,இந்தியா
28 அக்,2026 - 11:54 Report Abuse
பாதிப்பு ஏதும் இல்லாத ஏனைய கடலோர மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் போன்றவற்றில் இருந்து மீட்பு குழு ஆந்திரா, ஒடிஷாவிற்கு உதவலாமே. 0
0
Reply
கண்ணன் - ,
28 அக்,2026 - 09:38 Report Abuse
அர்னாப் புயல் பாதிப்பு குறித்து வானிலை முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்ததால் பாதிப்பு ஏதுமில்லை 0
0
Reply
மேலும்
-
பால் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த அரசுக்கு ஆவின் நிர்வாகம் பரிந்துரை
-
பாரத் இன்டர்நேஷனல் சர்வதேச பள்ளி மாணவி மாநில அளவிலான போட்டியில் வென்று சாதனை
-
தொடர் மழையால் விவசாய பணி தீவிரம்
-
ஐயனாரப்பன் கோவில் கும்பாபிஷேக விழா
-
பொம்மிடியில் கோவை எக்ஸ்பிரஸ் நிறுத்தம் கேட்டு அமைச்சருக்கு மனு
-
டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - 2, 2ஏ' தேர்வில் 2,646 பேர் 'ஆப்சென்ட்'
Advertisement
Advertisement